லார்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தன் 26வது சதத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்ட நியூசிலாந்தை இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலிஸ்டைர் குக் 31 வருடம் 157 நாட்கள் என்ற வயதில் 10,000 டெஸ்ட் ரன்கள் மைல்கல்லை எட்ட ஜோ ரூட்டும் அதே 31 ஆண்டு 157 நாட்களில் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். 118வது டெஸ்ட்டில் ரூட் 10,000 ரன்களை எட்டினார். 4வது இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் முதல் சதமே வெற்றிச் சதமாக அமைந்தது.
277 ரன்கள் வெற்றி இலக்கை 4ம் நாளான இன்று இங்கிலாந்து வெற்றிகரமாக எட்டியது, ஜோ ரூட் 170 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் நாட் அவுட், இன்னொரு முனையில் பென் ஃபோக்ஸ் 32 நாட் அவுட் இருவரும் சேர்ந்து உடைக்க முடியாத கூட்டணியாக 120 ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து 279/5 என்று அபார வெற்றி பெற்றது.
1️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ Test runs for Joe Root! 🎉
A special player brings up a special milestone along with his 26th Test hundred! 🙌 #ENGvNZ pic.twitter.com/mX0xOnaqrD
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 5, 2022
ஒரு கட்டத்தில் 69/4 என்று தோல்வியின் சுவடுகளை தாங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியை கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் கூட்டணி 90 ரன்களைச் சேர்த்து நிலைநிறுத்தியது. அதில் பென் ஸ்டோக்ஸுக்கு பெரிய லக். கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். ஆனால் அது நோ-பால் ஆனது. இதனால் வாழ்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 110 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஜேமிசனின் பவுன்சரை அப்பர் கட் செய்யப்போய் கேட்ச் ஆனார்.
அதன் பிறகு ஜோ ரூட் ராஜ்ஜியம் தான், அவருக்கு பென் ஃபோக்ஸ் உறுதுணையாக இருந்தார். இருவரும் 120 ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து 78.5 ஓவர்களில் 279/5 என்று அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இன்று காலை 216/5 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அட்டகாசமான சில பவுண்டரிகளுடனும் பென் ஃபோக்ஸின் சப்போர்ட்டுடனும் வெற்றியை எளிதாக எட்டியது. இதன் மூலம் ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 12-ஐ பெற்றது இங்கிலாந்து.
புதிய கோச், மெக்கல்லம், புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அற்புதமாக ஆடியது இங்கிலாந்து. ஆனால் அவர்கள் சொந்த மண்ணில் இங்கிலாந்து எப்போதும் தாதாகிரி என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.
சுருக்கமான ஸ்கோர்: நியூசிலாந்து 132 மற்றும் 285, இங்கிலாந்து 141 மற்றும் 279/5.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England test, Joe Root