England vs New Zealand | ‘தாதா’ கங்குலியின் 25 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே

லார்ட்ஸில் அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்த கங்குலி.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக ஆட்டத்திலேயே கங்குலி 131 ரன்களை 1996-ம் ஆண்டு எடுத்தார், நேற்று அந்தச் சாதனையை நியூசிலாந்து அறிமுக வீரர் டெவன் கான்வே முறியடித்தார்.

  • Share this:
    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று லார்ட்சில் தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் தன் முதல் டெஸ்ட்டில் ஆடும் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே சதம் அடித்தார். இதன் மூலம் அவர் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டுகால லார்ட்ஸ் சாதனையை முறியடித்தார்.

    அதாவது நேற்று நியூசிலாந்தின் இடது கை அறிமுக தொடக்க வீரர் டெவன் கான்வே 136 நாட் அவுட் என்று முதல்நாளை முடித்தார், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு வீரர் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே எடுத்த அதிகபட்ச ஸ்கோரான இந்தியாவின் சவுரவ் கங்குலியின் 131 ரன்கள் என்ற 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் கான்வே.

    டெவன் கான்வே.


    25 ஆண்டுகளுக்கு முன்பாக சவுரவ் கங்குலி தன் அறிமுக டெஸ்ட் போட்டியை லார்ட்சில் ஆடிய போது 301 பந்துகளில் 131 ரன்கள் என்று அசத்தி இந்தியாவுக்கு புதிய நட்சத்திரமாக அன்று உதயமானார். கங்குலி இதில் 20 பவுண்டரிகளை விளாசினார்.

    கங்குலிக்கு முன்பாக ஹாரி கிரகாம், ஜான் ஹாம்ப்ஷயர் ஆகியோர் லார்ட்ஸில் அறிமுக டெஸ்ட்டில் சதம் கண்டது குறிப்பிடத்தக்கது. கான்வேவுக்கும் கங்குலிக்கும் அறிமுக லார்ட்ஸ் டெஸ்ட் சதத்தில் மட்டும் ஒற்றுமை இல்லை, ஜூலை 8 என்ற பிறந்த தினத்திலும் இருவருக்கும் ஒற்றுமைதான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் எடுத்த வீரர்கள் விவரம்:

    ஹாரி கிரகாம் 107 ரன்கள் - 1893ம் ஆண்டு

    ஜான் ஹாம்ப்ஷயர்- 107 ரன்கள்- 1969-ம் ஆண்டு

    சவுரவ் கங்குலி 131 ரன்கள்- 1996-ம் ஆண்டு

    ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 112 - 2004-ம் ஆண்டு

    மாட் பிரையர் 126 ரன்கள்- 2007-ம் ஆண்டு

    Also Read: England vs New Zealand | அறிமுக டெஸ்ட்டில் சதமடித்து அசத்தல் : டெவன் கான்வேயின் 136 நாட் அவுட்டினால் நியூசிலாந்து டாப்

    தற்போது டெவன் கான்வே அறிமுக லார்ட்ஸ் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published: