டேரில் மிட்செல் சதம்: இங்கிலாந்து வெற்றி இலக்கு 277 ரன்கள்- 49 ரன்களுக்கு 6 விக்.இழந்த நியூசிலாந்து
டேரில் மிட்செல் சதம்: இங்கிலாந்து வெற்றி இலக்கு 277 ரன்கள்- 49 ரன்களுக்கு 6 விக்.இழந்த நியூசிலாந்து
டேரில் மிட்செல் சதம்
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று நியூசிலாந்து அணி தன் 2வது இன்னிங்ஸில் 285 ரன்களுக்குச் சுருண்டது.நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் 108 ரன்கள் எடுக்க டாம் பிளண்டெல் 96 ரன்களில் ஆட்டமிழக்க பிராட் பிரமாதமாக வீச நியூசிலாந்து அணி தன் 2வது இன்னிங்ஸில் இன்று காலை 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களுக்குச் சுருண்டது.

இன்று இன்னும் 73 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த இலக்கை எதிர்த்து இங்கிலாந்து 7/0 என்று ஆடி வருகிறது. நேற்று 236/4 என்று தொடங்கிய நியூசிலாந்து அணியை மீட்டுக் கொண்டு வந்த வீரர்களான டாம் பிளண்டெல், டேரில் மிட்செல் 5வது விக்கெட்டுக்காக மிக மிக முக்கியமான 195 ரன்கள் கூட்டணியை அமைத்தனர்.
இன்று பிளண்டெல் 90 ரன்களுடனும், மிட்செல் 96 ரன்களுடனும் இறங்கினர், இதில் மிட்செல் சதம் கண்டார். 12 பவுண்டரிகளுடன் அவர் சதமெடுத்தார். ஆனால் 108 ரன்கள் எடுத்து பிராட் பந்தை ஃபோக்ஸிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். அடுத்து இறங்கிய கொலின் டி கிராண்ட் ஹோம் என்ற அபாய வீரருக்கு பிராட் இன்ஸ்விங்கரை வீச பந்து கால்காப்பில் பட்டு பின்னால் சென்றது பலத்த முறையீட்டை நடுவர் எல்.பி.இல்லை என்று மறுத்தார்.
ஆனால் கிரீசிலிருந்து சில அடிகள் ரன்னுக்காக ஓடி திரும்புவதில் மந்தம் காட்டினார் கொலின் டி கிராண்ட் ஹோம், அதற்குள் ஆலி போப் பந்தை எடுத்து நேராக ஸ்ட்ரைக்கர் முனை ஸ்டம்பை தாக்க விசித்திரமாக ரன் அவுட் ஆனார் அவர். அடுத்த பந்தே கைலி ஜேமிசன் காலை நகர்த்தாமல் பிராட் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார்.
ஒரு இழுப்பு இழுத்து சதம் எடுக்க வேண்டிய பிளண்டெல் தேவையில்லாமல் லொட்டு வைத்து ஆண்டர்சனின் பந்தில் எல்.பி. ஆகி 96 ரன்களில் வெளியேறினார். டிம் சவுத்தி கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டி 4 பவுண்டரிகளுடன் 21 எடுக்க, அஜாட் படேல், ட்ரெண்ட் போல்ட் தலா 4 ரன்களில் வெளியேற நியூசிலாந்து 285 ரன்களுக்குச் சுருண்டது, இங்கிலாந்து வெற்றி இலக்கு 277 ஆக உள்ளது.
இங்கிலாந்து தரப்பில் பிராட், பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பார்க்கின்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.