India vs England | அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது- புள்ளிகள், அணிகள் தரவரிசையில் மாற்றம்- முழு விவரம்

ஜோ ரூட்-விராட் கோலி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பட்டௌடி கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது, இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சுற்றுக்கள் தொடங்குகின்றன. அதாவது ஆகஸ்ட் 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுக்கள் தொடங்குகின்றன.

  • Share this:
    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பட்டௌடி கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது, இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சுற்றுக்கள் தொடங்குகின்றன. அதாவது ஆகஸ்ட் 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுக்கள் தொடங்குகின்றன.

    இதனுடன் ஆஷஸ் தொடர் நடைபெறுகிறது, இந்த இரண்டு தொடர்கள் தான் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராகும். அதே போல் 2022-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இது 4 டெஸ்ட்கள் கொண்ட ஒரேயொரு தொடராகும், இவைதவிர 3 டெஸ்ட்கள் கொண்ட 7 தொடர்கள், 2 டெஸ்ட்கள் கொண்ட 13 தொடர்கள் ஆகியவை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2ம் சுற்றில் இடம்பெற்றுள்ளன, இறுதிப் போட்டிக்கான நாடு இன்னமும் ஐசிசி முடிவு செய்யவில்லை.

    டெஸ்ட் விளையாடும் 9 அணிகளும் தலா 6 தொடர்களில் ஆட வேண்டும், 3 தொடர் உள்நாட்டில் 3 தொடர் வெளிநாட்டில். கோவிட்-19-னால் முதல் சுற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கைவிடப்பட்ட எந்த த் தொடரும் இதில் இடம்பெறாது.

    மீண்டும் பணபல இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பெரிய டெஸ்ட் தொடர்களை தங்களுக்கு இடையே ஆட மற்ற அணிகளுகு 3 டெஸ்ட்கள் கொண்ட தொடர் அல்லது 2 டெஸ்ட்கள் கொண்ட தொடர்தான். இப்படிக் கொடுத்தால் எப்படி அந்த அணிகள் இறுதிக்கு முன்னேற முடியும் என்ற கேள்வி எழுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏனெனில் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன் சுற்றில் இங்கிலாந்து 21 டெஸ்ட்களிலும் இந்தியா 19 டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியா 18 டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா 15 போட்டிகளிலும் ஆட நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான நியூசிலாந்து 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடும். வெஸ்ட் இண்டீஸ், இலங்கையும் 13 டெஸ்ட் போட்டிகளை மட்டும் ஆடும், பாகிஸ்தான் ஒன்று கூட அதாவது 14 டெஸ்ட் போட்டிகளில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சுற்றில் ஆடும். வங்கதேசத்துக்கு 6 தொடர்கள் இருந்தாலும் ஒரு தொடருக்கு 2 டெஸ்ட் போட்டிகள்தான்.

    புள்ளிகளில் மாற்றம்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சுற்றில் போட்டி ஒன்றுக்கு 12 புள்ளிகள்தான். ட்ராவுக்கு 4 புள்ளிகள், டை ஆனால் இரு அணிகளுக்கும் 6 புள்ளிகள். ஓவர்களை குறித்த நேரத்தில் வீசாமல் தாமதித்தால் அபராதம் உண்டு. எத்தனை ஓவர் குறைவாக வீசியிருக்கிறார்களோ அத்தனை புள்ளிகள் குறைக்கப்படும். விளையாடப்படும் போட்டிகளில் அணிகள் பெறும் புள்ளிகளின் சதவீதத்தின் படி அணிகள் தரவரிசைப்படுத்தப்படும். எனவே அணிகள் எண்ணிக்கையில் கூடுதலாகவோ, குறைவாகவோ டெஸ்ட்களில் ஆடினாலும் தரவரிசைப்படுத்தல் படிதான் அணிகளின் நிலை மதிப்பிடப்படும் என்று தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published: