இங்கிலாந்துக்கு எளிய இலக்கு! வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

ICC World Cup 2019 | England vs Australia | ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க தனி வீரராக ஸ்மித் அணியை தாங்கி பிடித்தார்.

news18
Updated: July 11, 2019, 9:29 PM IST
இங்கிலாந்துக்கு எளிய இலக்கு! வீழ்த்துமா ஆஸ்திரேலியா?
England vs Australia
news18
Updated: July 11, 2019, 9:29 PM IST
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினர். இந்த தொடரின் வெற்றி ஜோடியாக களம் கண்டு வந்த இவர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் பின்ச், வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் பந்துவீச்சில் டக்-அவுட்டாகினார்.

அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்கவீரரான வார்னர் வோக்ஸ் பந்துவீச்சில் பேரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய க்வாஜாவிற்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ஹேண்டஸ்காம்ப் நெருக்கடியான சூழலில் விளையாடி வந்தார்.பதற்றத்துடன் விளையாடிய ஹேண்டஸ்காம்ப் வோக்ஸ் பந்துவீச்சில் போல்ட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி 14 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. அவரை அடுத்து விக்கெட் கீப்பர் கேரி களமிறங்கி நிதானமாக ஆடி வந்தார்.

போட்டியின் 8வது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை கேரி எதிர்கொண்டார். ஆக்ரேஷமாக ஆர்சர் வீசிய பந்தை கேரி தடுக்க முயன்ற போது அவரது தாடைப்பகுதியை பலமாக தாக்கியது. இதனால் காயமடைந்த கேரி பிளாஸ்திரி உடன் மனஉறுதியுடன் விளையாடி 46 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த ஸ்டோனிஸ் அதே ஓவரில் டக் அவுட்டாகினார்.

ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க தனி வீரராக ஸ்மித் அணியை தாங்கி பிடித்தார். பொறுப்புடன் ஆடிய ஸ்மித் 118 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ரன்அவுட்டானார்.இறுதியில் ஆஸ்திரேலிய அணி223 ரன்களை எடுத்துள்ளது.  உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியா அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி கண்டதே இல்லை. இங்கிலாந்தின் பலம்வாய்ந்த பேட்டிங் ஆர்டரை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீழ்த்துமா? வீழுமா? என்பது போட்டியின் 2வது பாதியில் தெரியவரும்.

Also Read: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை!


Also Read : நடுவரின் தவறால் தோனி ரன் அவுட்? சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங்
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...