கொரோனோ அச்சுறுத்தலுக்கு இடையே போட்டி அட்டவணை வெளியிட்ட இலங்கை!

கொரோனோ வைரஸ் பரவல் தொடர்ந்து நீட்டிக்கும் பட்சத்தில் போட்டி அட்டவணையை மேலும் மாற்ற திட்டம்

கொரோனோ அச்சுறுத்தலுக்கு இடையே போட்டி அட்டவணை வெளியிட்ட இலங்கை!
மாதிரி படம்
  • Share this:
அடுத்த வருடம் (2021) ஜனவரி மாதம் இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இருந்தது.

இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் விளையாடிய சூழ்நிலையில் கொரோனோ வைரஸ் அச்சுருத்தலால் இரண்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டுச்சென்றனர்.


இந்நிலையில் இதற்கு மாற்றாக இரு கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஜனவரியில் விளையாட முடிவு செய்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி  இங்கிலாந்து சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் எனவும் தேதி மற்றும் மைதானம் பிறகு முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனோ வைரஸ் பரவல் தொடர்ந்து நீட்டிக்கும் பட்சத்தில் போட்டி அட்டவணையை மேலும் மாற்றும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் ஊரடங்கில் இருக்கும் போது இலங்கை அணி துணிச்சலாக போட்டி அட்டவணையை அறிவித்தது அனைவருக்கும் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறும் பட்சத்தில் இங்கிலாந்து அணி அதே ஜனவரி  மாதத்தில்  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஒத்திவைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


Also see...
First published: May 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading