Home » News » Sports » CRICKET ENGLAND TO TOUR INDIA IN FEBRUARY AHMEDABAD TO HOST DAY NIGHT TEST VJR

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி... போட்டி விவரங்கள் அறிவிப்பு

Inida vs England | ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனவரியில் நாடு திரும்பும் இந்திய அணி பிப்ரவரியில் இங்கிலாந்து உடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி... போட்டி விவரங்கள் அறிவிப்பு
India vs England
  • Share this:
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்தப்போதும் டி20 தொடரை வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனவரியில் நாடு திரும்பும் இந்திய அணி பிப்ரவரியில் இங்கிலாந்து உடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. முதல் மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளும் அகமாதபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகளும் அகமாதபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதியாக இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. 3 ஒரு நாள் போட்டிகளும் புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி விவரம்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
First published: December 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories