ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் தொடர் - தேதிகள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்தி வைக்கப்பட்ட இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் தொடர் - தேதிகள் அறிவிப்பு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சத்தால் கிட்டத்தட்ட கடந்த 2 மாதங்களாக விளையாட்டு உலகம் போட்டிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கியுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து கிரிக்கெட் வாரியங்கள் பேசி வருகின்றன.

கொரோனா அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து -  வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 டெஸ்ட் தொடரை ரசிகர்கள் இன்று மைதானத்தில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.

இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும் தேதி மற்றும் மைதானத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, ஜூலை 8 முதல் 12 வரை ஹேம்ப்ஷையர்ஸ் ஏஜஸ் பவல் மைதானத்திலும், 2 வது டெஸ்ட் ஜூலை 16 முதல் 20 வரை ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்திலும், 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 24 முதல் 28 வரை மான்செஸ்டர் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தொடரில் விளையாடுவதற்காக ஜூன் 9-ம் தேதி இங்கிலாந்து வந்தடையும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் அனைவரும் 3 வார கால தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி(Steve Elworthy), வீரர்கள், போட்டி நடுவர்கள், ஊழியர்கள், மைதான பராமரிப்பாளர்கள், ஒளிபரப்பு சேனல் என அனைவரின் நலன் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும், நாள்தோறும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த தொடர் ஓவல், எட்ஜ்பஸ்டான் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், கொரோனா அச்சத்தால் மைதானம் மாற்றப்பட்டதோடு, ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் படிக்க...

சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

கடந்த 15 நாட்களில் 1 லட்சம் பேருக்கு தொற்று - இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு








First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading