• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இங்கிலாந்தின் வீழ்ச்சி இந்திய அணியை மட்டமாக எடைபோட்டதால் தான்: சுனில் கவாஸ்கர்

இங்கிலாந்தின் வீழ்ச்சி இந்திய அணியை மட்டமாக எடைபோட்டதால் தான்: சுனில் கவாஸ்கர்

ஒரு இரட்டைச் சதத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக 4 சதங்களை எடுத்துள்ளார் கவாஸ்கர் ஓவலில் எடுத்த 221 ரன்கள் மறக்க முடியாதது. 438 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி இந்தியா 9 ரன்கள் குறைவாக எடுக்க மேட்ச் ட்ரா ஆகும்.

ஒரு இரட்டைச் சதத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக 4 சதங்களை எடுத்துள்ளார் கவாஸ்கர் ஓவலில் எடுத்த 221 ரன்கள் மறக்க முடியாதது. 438 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி இந்தியா 9 ரன்கள் குறைவாக எடுக்க மேட்ச் ட்ரா ஆகும்.

இங்கிலாந்து அணியும் இங்கிலாந்து ஊடகங்களும் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி அதிகம் யோசித்து இந்தியாவுக்கு எதிரான தொடரை ஏதோ எளிதானது என்று எடைபோட்டு சிக்கிக் கொண்டனர்.

  • Share this:
    இங்கிலாந்து அணியும் இங்கிலாந்து ஊடகங்களும் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி அதிகம் யோசித்து இந்தியாவுக்கு எதிரான தொடரை ஏதோ எளிதானது என்று எடைபோட்டு சிக்கிக் கொண்டனர்.

    ஓவல் வெற்றி மூலம் இங்கிலாந்தின் தொடரை வெல்லும் வாய்ப்புக்கான கதவை அடைத்தது இந்திய அணி, மாறாக இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கிலாந்து அணி முந்தைய டெஸ்ட் போட்டியில் எழுச்சி பெற்றிருக்கலாம் ஆனால் இனி நடக்காது என்றே தெரிகிறது. இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இங்கிலாந்தின் மன நிலையை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

    “அடுத்த டெஸ்ட் போட்டியில் ரூட்டுக்குத்தா பிரஷர், ஏனெனில் இந்திய 2-1 என்று முன்னிலையில் உள்ளது. இன்னொரு பெரிய தவறு என்னவெனில் இங்கிலாந்து அணியும் இங்கிலாந்து ஊடகங்களும் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி பேசி இந்தியா அளிக்கும் சவாலை புறந்தள்ளி விட்டனர். இங்கிலாந்து இந்திய அணியை எளிதாக எடைபோட்டு விட்டது. இந்த மனப்போக்குக்கு தொடரை விலையாகக் கொடுத்துள்ளனர், இனி இந்தத் தொடரை அவர்கள் வெல்ல முடியாது.

    இந்தியா ஓவல் டெஸ்ட் 2வது இன்னிங்சில் 380 ரன்களை மட்டுமே எடுத்திருந்தால் இங்கிலாந்து 280 ரன்கள் பக்கம் விரட்ட வேண்டியிருந்திருக்கும் இது அவர்கள் அழுத்தத்தை குறைத்திருக்கும், ஆனால் 368 என்பது பெரிய பிரஷர் இலக்குதான். டெய்ல் எண்டர்கள் இந்தியாவுக்கு அந்தப் பங்களிப்பைச் செய்தனர், லார்ட்ஸில் அதைப்பார்த்தோம் இப்போது ஓவலிலும் பார்த்தோம்.

    Also Read: ஒரே மூதாதையர்கள்தான் என்றால் முஸ்லிம்களை ஏன் இப்படி நடத்த வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.க்கு மாயாவதி கேள்வி

    பவுலர்கள் பேட்டிங்கில் ரன் எடுத்தால் அவர்கள் பவுலிங் செய்யும் போது அவர்களது தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவலில் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இவ்வாறு கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: