Home » News » Sports » CRICKET ENGLAND SHOULD LEARN FROM DRAVID HOW TO PLAY SPIN KEVIN PIETERSEN SHARED DRAVID E MAIL MUT

ஸ்பின் பவுலிங்கை எப்படி ஆடுவது?- இங்கி. கற்றுக் கொள்ள வேண்டும்: ராகுல் திராவிடின் மின்னஞ்சலைப் பகிர்ந்த பீட்டர்சன்

இங்கிலாந்து அணி நிர்வாகம் ராகுல் திராவிடின் மின்னஞ்சலை பிரிண்ட் எடுத்து இங்கிலாந்து வீரர்கள் சிப்லி, கிராலி ஆகியோருக்கு அளிக்க வேண்டும், என்கிறார் கெவின்பீட்டர்சன்

ஸ்பின் பவுலிங்கை எப்படி ஆடுவது?- இங்கி. கற்றுக் கொள்ள வேண்டும்: ராகுல் திராவிடின் மின்னஞ்சலைப் பகிர்ந்த பீட்டர்சன்
ராகுல் திராவிட்
  • Share this:
இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ஸ்பின் பவுலிங்கை எப்படி ஆடுவது என்பதை ராகுல் திராவிட் தனக்கு அனுப்பிய மின்னஞ்சலை வாசித்து தெரிந்து கொள்ளட்டும் என்று கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ராகுல் திராவிட் தனக்கு அனுப்பிய அந்த மின்னஞ்சலை கெவின் பீட்டர்சன் தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்து அணி நிர்வாகம் ராகுல் திராவிடின் மின்னஞ்சலை பிரிண்ட் எடுத்து இங்கிலாந்து வீரர்கள் சிப்லி, கிராலி ஆகியோருக்கு அளிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.


டொமினிக் சிப்லி, ஜாக் கிராலி இருவரும் நடப்பு இலங்கைக்கு எதிரான தொடரில் கடுமையாகத் தடுமாறி வருகின்றனர். 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இருவரும் சொதப்பி ஆட்டமிழந்ததையடுத்து ராகுல் திராவிட் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் கெவின் பீட்டர்சன்.

“கிராலியும் சிப்லியும் திராவிட் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலைப் படித்து ஸ்பின் பவுலிங்கை எப்படி ஆடுவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அதுதான் என் ஆட்டத்தையும் மாற்றியது” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த மின்னஞ்சலில் ராகுல் திராவிட், “பந்துகள் திரும்பும் பிட்ச்களில் காலை முன்னால் கொண்டு வரவேண்டும் ஆனால் கமிட் ஆகிவிடக்கூடாது, மட்டையை நீட்டக் கூடாது, பந்து வந்த பிறகு ஆட வேண்டும், மட்டையை நீட்டினால் நிச்சயம் சிக்கல்தான். ஏனெனில் காலை முன்னால் போட்டு கமிட் செய்து விட்டால் பந்து வரும் வரை வெயிட் பண்ண மாட்டோம் மட்டையை நீட்டி விடுவோம் இது நம் இயல்பான செயல், மாறாக பந்து திரும்பும் போதும் மட்டையைக் கொண்டு செல்வோம். ஆடாமல் விடுவதற்குப் பதிலாக மட்டையை பந்து திரும்பும் இடத்திற்கெல்லாம் கொண்டு செல்வோம், இது தவறு.அதாவது முன்னங்காலை நீட்ட வேண்டும் ஆனால் அதை கமிட் செய்யாமல் பின் காலில் சென்று ஆடமுடியக் கூடிய அளவில் இருக்க வேண்டும் ஏனெனில் பேக்புட் ஷாட்களில்தான் ஸ்பின்னில் ரன்கள் திரும்பும் பிட்ச்களில் நமக்குக் கிடைக்கும்.

நான் மாண்ட்டி பனேசர், கிரகாம் ஸ்வானை எதிர்கொள்ள சிறந்த பயிற்சி என்னவெனில் கால்காப்பு இல்லாமல் வலைப்பயிற்சியில் பேட் செய்ய வேண்டும். இதனால் கமிட் ஆகாமல் பந்துகளை நாம் நெருக்கமாக அவதானிக்க முடியும் ஏனெனில் கால்காப்பு இல்லாததால் அடிபட்டு விடக்கூடாது என்று நாம் கருத்தாக இருப்போம். என் பயிற்சியாளர் அதுதான் கூறுவார் ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக கால்காப்புத் தேவையில்லை என்பார்.

ஒரு பந்து மட்டையைக் கடந்து சென்றால் என்ன? நாம் அங்குதானே இருக்கிறோம் அவுட் ஆகி விடவில்லையே, அடுத்த பந்தை நாம் வேறு வகையில் எதிர்கொள்ளலாமே. உங்களால் ஸ்பின்னை ஆட முடியாது என்று யாரும் கூற அனுமதிக்காதீர்கள். நான் உங்கள் பேட்டிங்கைப் பார்த்திருக்கிறேன், உங்களால் முடியும். ” என்று கூறியுள்ளார். இந்த மின்னஞ்சலைத்தான் கெவின் பீட்டர்சன் பகிர்ந்துள்ளார்.
First published: January 25, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories