England vs Sri Lanka ODI: ‘ஜெயிப்பேன் என்று நினைத்தாயா?’ - பரிதாப இலங்கை மீண்டும் தோல்வி

மோர்கன் - ரூட் சதக்கூட்டணி.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்று வென்றகு ஒருநாள் தொடரிலும் இலங்கையை 2 போட்டிகளில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.

  • Share this:
    கியா ஓவலில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இயான் மோர்கன் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். இடது கை ஸ்விங் பவுலர் சாம் கரன் 5 விக்கெட்டுகளைச் சாய்க்க இலங்கை அணி 241/9 என்று முடிந்தது, அந்த அணியின் தனஞ்ஜய டிசில்வா அபாரமாக ஆடி 91 ரன்களையும் ஷனகா 47 ரன்களையும் எடுத்ததினால் இந்த எண்ணிக்கை வந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 244/2 என்று வெளுத்து வாங்கி வெற்றி பெற்றது.

    3வது மற்றும் சம்பிரதாய இறுதிப் போட்டி ஞாயிறன்று பிரிஸ்டலில் நடைபெறுகிறது.

    சாம் கரன் மற்றும் ஜேசன் ராய் தங்களின் சொந்த மண்ணில் அசத்தினர். ஜேசன் ராய் 52பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இலங்கை அணி தன் கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் 7-ல் தோற்றுள்ளது.

    சாம் கரன் தொடக்க ஓவர்களை அபார்மாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், குசல் பெரேரா (2), அவிஷ்கா பெர்னாண்டோ (2) எல்.பி. ஆகி வெளியேறினர். பதும் நிசாங்காவை சாம் கரன் பவுல்டு செய்தார். டேவிட் வில்லே, சரித் அசலங்கா விக்கெட்டைக் கைப்பற்ற 21/4 என்று இலங்கை காலியானது.

    ஆனால் ஒரு முனையில் தனஞ்ஜயா மிகப்பிரமாதமான ஸ்ட்ரெய்ட் டிரைவ், கட், புல் ஷாட், கவர் ட்ரைவ் என்று நான்குகளை அடித்துக் கொண்டிருந்தார், 58 பந்துகளில் இவர் அரைசதம் கடந்தார். இவரும் ஹசரங்காவும் (26) 65 ரன்களையும், இவரும் தசூன் சனகாவும் (47) சேர்ந்து 78 ரன்களைச் சேர்த்தனர். மார்க் உட் பந்தில் ஹசரங்காவுக்கு பேர்ஸ்டோ கேட்சை விட்டார். ஆனால் சாம் கரன் டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக் கேட்ச் மூலம் ஹசரங்காவை வெளியேற்றினார்.

    91 விளாசிய தனஞ்ஜய டிசில்வா 40 ரன்களில் சாம் கரன் த்ரோ ஸ்டம்பை தாக்கியிருந்தால் ரன் அவுட் ஆகி வீட்டுக்குச் சென்றிருப்பார், ஆனால் த்ரோ தவறியது. டிசில்வா 91 ரன்களில் டேவிட் வில்லேயின் ஷார்ட் பிட்ச் பந்தை கொடியேற்றி ஆட்டமிழந்தார், ஆனால் இது ஒரு நல்ல இன்னிங்ஸ். சனகாவும் டீப் கவில் கேட்ச் கொடுத்து டேவிட் வில்லேயிடம் வீழ்ந்தார். சமிக கருணரத்னே 21 ரன்களை கடைசியில் எடுத்தார். சாம் கரன் 5 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லே 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலங்கை 241/9 என்று முடிந்தது. கடைசி 3 பந்தில் சமீரா சாத்தினார் 1 சிக்சருடன் 14 ரன்களை இவர் எடுத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இலக்கை விரட்டும்போது ஜேசன் ராய் முதல் 8 ஓவர்களில் தன் 8 பவுண்டரிகளை விளாசினார். முதல் விக்கெட்டுக்காக 50 ரன்கள் வந்த போது ராய் 40 ரன்களிலும் பேர்ஸ்டோ 9 ரன்களிலும் இருந்தனர். 9வது ஓவரில் பெர்னாண்டோவை 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் ஹசரங்கா பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார் பேர்ஸ்டோ. ஜேசன் ராய் தன் 20வது ஒருநாள் அரைசதத்தை 47 பந்துகளில் எடுத்தார். இவரும் 60 ரன்களில் அவுட் ஆனார்.

    அதன் பிறகு இலங்கையினால் விக்கெட் எடுக்க முடியவில்லை ஜோ ரூட் 68 ரன்களையும் இயான் மோர்கன் 75 ரன்களையும் 140 ரன்களை 26 ஓவர்களில் அடித்து ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தனர்.

    இங்கிலாந்து 2-0 என்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக சாம் கரன் தேர்வு செய்யப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published: