ENGvAFG | ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

ICC World Cup 2019 | England vs Afghanistan | மார்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சர் கள் விளாசி 148 ரன்கள் குவித்தார்.

Web Desk | news18
Updated: June 18, 2019, 6:45 PM IST
ENGvAFG | ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து
ENGvsAFG
Web Desk | news18
Updated: June 18, 2019, 6:45 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 397 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வின்ஸ், பேரிஸ்டோவ் களமிறங்கினர். வின்ஸ் 26 ரன்களிலும், பேரிஸ்டோவ் 90 ரன்களிலும் அவுட்டாகினர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். மார்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சர்கள் விளாசி 148 ரன்கள் குவித்தார். மார்கன் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.



இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அதிகப்பட்ச ரன் இது. ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ரஷித்கான் இந்த போட்டியில் ரன்னை வாரிவழங்கி உள்ளார். 9 ஓவர்கள் வீசிய ரஷித் 110 ரன்கள் கொடுத்துள்ளார்.
First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...