Home /News /sports /

வலுவான நிலையில் இங்கிலாந்து அணி... கோப்பையை வெல்லுமா ஆஸ்திரேலிய அணி?

வலுவான நிலையில் இங்கிலாந்து அணி... கோப்பையை வெல்லுமா ஆஸ்திரேலிய அணி?

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 70 ரன்களும் ஜோ ரூட் 57 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் மார்ஸ் 5 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜாஸ் ஹேஜுல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து தடுமாறியது. அடுத்து களம் இறங்கிய ஸ்மித், லபுசேன் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மித் தனது 27-ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார். பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆர்ச்சர்

    பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து 78 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இதையடுத்து 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இங்கிலாந்து அணியின் ஜோ டென்லி 94 ரன்களும், பெண் ஸ்டோக்ஸ் 67 ரன்களும் ஜாஸ் பட்லர் 47 ரன்களும் அடித்தனர். 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்து 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

    ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், பீடர் சிடில், மிசெல் மார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஆஷஸ் தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவுற்ற நிலையில் அதில் 2-1 என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Ashes

    அடுத்த செய்தி