இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 முக்கிய மாற்றங்கள்?
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 முக்கிய மாற்றங்கள்?
இங்கிலாந்து அணி
ICC World Cup 2019 | India vs England | England Predicted Playing XI | இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோசன் ராய் இன்றைய போட்டியில் களமிறங்குவதார் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட இங்கிலாந்து அணியில் 2 முக்கிய மாற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள்அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. நான்காவதாக உள்ளே செல்வதற்கு இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கடைசியாக இலங்கை, ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இன்று இந்தியாவிற்கு எதிரான போட்யில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காயம் காரணமாக விளையாடமல் இருந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோசன் ராய் இன்றைய போட்டியில் களமிறங்குவதார் என எதிர்பார்க்கப்படுகிறது.
— Cricket World Cup (@cricketworldcup) 30 June 2019
இதுவரை அவர் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதால் அவர் அணியில் இடம்பெறவில்லையென்றால் தொடக்க வீரராக வின்ச் களமிறங்குவார். அதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் தொடையில் சதைபிடிப்பு காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவாரா? என்பது கேள்விகுறியாக உள்ளது.
காயம் காரணமாக ஆர்சர் விலகினால் லியாம் பல்கன்ட் இன்று களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து உத்தேச அணி : ஜாசன் ராய்/ ஜேம்ஸ் வின்ச், ஜானி பேரிஸ்டோவ், ஜோ ரூட், இயான் மார்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி. வோக்ஸ், அடில் ரஷித், மார்க் உட், ஆர்சர்\லியாம் பல்கன்ட்
Also Watch
;
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.