ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தவறான தகவலுடன் மீண்டும் வைரலாகும் விராட் கோலி போட்டோ..! - தெளிவுபடுத்திய முகமது அசாருதீன்!

தவறான தகவலுடன் மீண்டும் வைரலாகும் விராட் கோலி போட்டோ..! - தெளிவுபடுத்திய முகமது அசாருதீன்!

இணையத்தில் வைரலகும் புகைப்படம்

இணையத்தில் வைரலகும் புகைப்படம்

கோலிக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கையால் பரிசு வாங்கியதை அறியாத பலரும் இதை உண்மை என்று நம்பி இது எப்படி சாத்தியம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  புதிய இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவரையும் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பிளேயரான விராட் கோலியையும் வைத்து சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் வைரலாகி வருகின்றன.

  இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் நம்ம கோலிக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறீர்களா? விராட் கோலிக்கும், ரிஷி சுனகிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனால் ரிஷி சுனக் நம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசீஷ் நெஹ்ரா போல உருவ ஒற்றுமையை கொண்டிருப்பது தான் தற்போது வைரலாகி வரும் மீம்ஸ்களுக்கு காரணம்.

  1999-ஆம் ஆண்டே இந்திய கிரிக்கெட் டீமில் இணைந்து தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் வீரரான நெஹ்ரா. தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்திய அணியின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். தற்போதைய இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி சிறு வயதில் இருந்தே பல கிரிக்கெட் மேட்ச்களில் விலையை தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடித்தவர்.

  விராட் சிறுவனாக இருந்த போது மேட்ச் ஒன்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நெஹ்ரா கையால் பரிசு வாங்கி இருக்கிறார். விராட்டிற்கும், நெஹ்ராவிற்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில் நெஹ்ரா அணியில் இருந்த போதே விராட்டும் இந்திய அணிக்கு வந்து விட்டார். இருவரும் ஒன்றிணைந்து பல மேட்ச்களில் விளையாடி இருக்கிறார்கள். அப்போதே நெஹ்ரா கையால் விராட் பரிசு வாங்கிய ஃபோட்டோ வைரலானது. இந்நிலையில் இந்த பழைய ஃபோட்டோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

  என்ன கேப்ஷனுடன் தெரியுமா.! "தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கையால் பரிசு வாங்கும் இளம் விராட் கோலி" என்று.. வைரலாகி வருகிறது. கோலிக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கையால் பரிசு வாங்கியதை அறியாத பலரும் இதை உண்மை என்று நம்பி இது எப்படி சாத்தியம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன், தனது லேட்டஸ்ட் ட்விட் மூலம் இளம் வயது கோலி-க்கு பரிசு கொடுப்பது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அல்ல, முன்னாள் ஸ்பீட் பவுலர் நெஹ்ரா என்று கூறி தெளிவுப்படுத்தி உள்ளார்.

  இதையும் படிங்க: இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - காரணம் இதுதான்!

  அசாருதீன் தனது ட்விட்டில் "இந்த ஃபோட்டோவில் உள்ள உண்மையான நட்சத்திரங்கள் விராட் கோலி & ஆசீஷ் நெஹ்ரா. WhatsApp-ல் ஷேர் செய்யப்படுவது போல ஃபோட்டோவில் தற்போதைய UK-ன் புதிய பிரதமர் அல்ல"என்று கூறி இருக்கிறார். நெஹ்ரா கோஹ்லிக்கு பரிசு வழங்குவதை குறிப்பிட்ட ஃபோட்டோ காட்டினாலும் உண்மை தெரிந்தவர்கள் கூட வேடிக்கையாக போலி தகவலை ஆமோதித்து ஃபன் செய்தனர்.

  https://twitter.com/azharflicks/status/1584829619085410304

  42 வயதான ரிஷி சுனக் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஆஷிஷ் நெஹ்ராவை ஒத்திருப்பதால் இந்த கேப்ஷன் கொடுப்பதில் தவறில்லை என்கிற ரீதியில் பலர் விளையாட்டாக கமெண்ட்ஸ் செய்தனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Rishi Sunak, Viral, Virat Kohli