இந்திய அணி பேட்டிங்.. சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டாளம், ரோஹித் சர்மா அணியில் இல்லை

இந்திய அணி பேட்டிங்.. சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டாளம், ரோஹித் சர்மா அணியில் இல்லை

இந்திய அணி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

 • Share this:
  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மா அணயில் இடம்பெறவில்லை. ஷிகார் தவான் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர்.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.இந்திய அணியில் ரோஹித் சர்மா அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு முதல் 2 போட்டிகள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  இந்திய அணி : கே.எல்.ராகுல், ஷிகார் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், சர்துல் தாகூர், சஹால்
  Published by:Vijay R
  First published: