• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Eng | இந்திய அணி பேட்டிங்... இங்கிலாந்தை வீழ்த்த இறுதிப் போட்டியில் இந்திய அணியில் நடராஜன்

Ind vs Eng | இந்திய அணி பேட்டிங்... இங்கிலாந்தை வீழ்த்த இறுதிப் போட்டியில் இந்திய அணியில் நடராஜன்

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

கே.எல். ராகுலுக்கு பதிலாக இன்றையப் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்ட்டுள்ளது.

  • Share this:
    இந்திய அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெரும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமாத்பாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார். கே.எல். ராகுலுக்கு பதிலாக இன்றையப் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்ட்டுள்ளது.

    இந்திய அணி : ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ராகுல் சஹர், தங்கராசு நடராஜன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: