INDvsENG | இந்திய அணி பேட்டிங்... சூர்யகுமார், ராகுல் சஹார்க்கு வாய்ப்பு

INDvsENG | இந்திய அணி பேட்டிங்... சூர்யகுமார், ராகுல் சஹார்க்கு வாய்ப்பு

India vs England

முதல் 3 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  • Share this:
இந்திய அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

முதல் 3 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்றையப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால் வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்துள்ளது.

இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்க்கும் சஹாலுக்கு பதிலாக ராகுல் சஹார் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். சஹால் கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்தார். அணியின் நடுவரிசையை பலப்படுத்த சூர்யகுமார் யாதவ்க்கு வாயப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர்
Published by:Vijay R
First published: