INDvsENG | இந்திய அணி பேட்டிங்... ஹிட்மேன் பேக், 100-வது போட்டியில் கேப்டன், இரு அணியிலும் முக்கிய மாற்றம்

INDvsENG | இந்திய அணி பேட்டிங்... ஹிட்மேன் பேக், 100-வது போட்டியில் கேப்டன், இரு அணியிலும் முக்கிய மாற்றம்

India vs England

India vs England | இங்கிலாந்து அணியில் டாம் குர்ரானுக்கு பதிலாக மார்க் உட் அணியில் இடம்பிடித்துள்ளார்

  • Share this:
    இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சம நிலையில் உள்ளனர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கேப்டன் இயான் மார்கனுக்கு இது 100-வது டி20 போட்டியாகும். இதனால் இன்றைய நாள் சிறப்பான நாள் என்று மார்கன் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா திரும்பி உள்ளார். சென்ற போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் பேட்டிங்கில் களமிறங்காத சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியில் இடம் கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    அதேப்போன்று இங்கிலாந்து அணியில் டாம் குர்ரானுக்கு பதிலாக மார்க் உட் அணியில் இடம்பிடித்துள்ளார். இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சம நிலையில் உள்ளதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.
    Published by:Vijay R
    First published: