Home /News /sports /

தோல்விமயத்தினால் கீழே இறங்கிய இங்கிலாந்தை மேலே உயர்த்துவது சவால்- பிரெண்டன் மெக்கல்லம்

தோல்விமயத்தினால் கீழே இறங்கிய இங்கிலாந்தை மேலே உயர்த்துவது சவால்- பிரெண்டன் மெக்கல்லம்

பிரெண்டன் மெக்கல்லம்

பிரெண்டன் மெக்கல்லம்

டெஸ்ட் கிரிக்கெட்டே நலிவடைந்து வருகிறது என்று கூறும் இங்கிலாந்தின் புதிய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், குறிப்பாக கீழே சென்று விட்ட இங்கிலாந்து கிரிக்கெட்டை மேலே உயர்த்தும் சவாலான காரியம் தனக்குப் பிடித்திருக்கிறது அதனால் இங்கிலாந்து பயிற்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...

    வியாழன் அன்று இங்கிலாந்தின் டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் உறுதி செய்யப்பட்டார், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் நடப்பு ஐபிஎல் சீசனை முடித்த பிறகு அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்காக அவர் பதவியேற்பார்.

    இது தொடர்பாக பிரெண்டன் மெக்கல்லம் கூறியதாவது:

    நான் இரண்டு ரோல்களில் ஆர்வம் காட்டினேன். வெள்ளைப்பந்து இங்கிலாந்து அணிக்கு நான் பயிற்சியளிக்க ஆர்வம் காட்டவில்லை, காரணம், இங்கிலாந்து குறுகிய வடிவத்தில் உயரே பறந்து கொண்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த அணிகளுள் ஒன்று. இயோன் மோர்கன் இருக்கிறார், அவரும் என் சிறந்த நண்பர். அவர் ஒரு அமைப்பையும் சிஸ்டத்தையும் உருவாக்கி வைத்துள்ளார், அது நீண்ட காலம் இருக்கும், பயனளிக்கும்.

    எனவே எனக்கு ஏற்கெனவே குஷனில் இருக்கும் அணியை எடுத்துக் கொள்வதில் சவால் இல்லை, உன் வாழ்க்கையை மாற்றும் பணி வேண்டுமெனில் கடினமான பணியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிகவும் கீழே உள்ள இங்கிலாந்து அணியை மேலே கொண்டு வருவதுதான் சவால்.

    நீண்ட காலம் நிலைக்கக் கூடியதாக தொலைநோக்குப் பார்வையுடன் நான் இயங்குவேன். இதுதான் சவால். என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் அதன் புகழ் கீழ்நோக்கிய சரிவு கண்டுள்ளது. மேலும் பிரான்சைஸ் கிரிக்கெட் மற்றும் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் மீதுதான் எனது உண்மையான காதல். "டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து அதை மீண்டும் பிரபலப்படுத்த விரும்பினால்,அது இங்கிலாந்தை மேம்படுத்துவதாகத்தான் இருக்கும்.

    என்றார் பிரெண்டன் மெக்கல்லம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Brendon McCullum, England test

    அடுத்த செய்தி