Eng vs Pak T20 | ஆட்டத்தை மாற்றிய அந்த 5 ஓவர்கள்: 2வது டி20-யில் பாகிஸ்தானை நொறுக்கிய இங்கிலாந்து

ஆல்ரவுண்ட் ஆட்ட நாயகன் மொயின் அலி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 200 ரன்களைக் குவிக்க பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டி 155/9 என்று தோல்வியடைந்தது. 

 • Share this:
  லீட்ஸ், ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 200 ரன்களைக் குவிக்க பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டி 155/9 என்று தோல்வியடைந்தது.

  ஆதில் ரஷீத், மொயின் அலி, மாட் பார்கின்சன் ஆகிய ஸ்பின்னர்கள் சாதிக்க, பேட்டிங்கில் இங்கிலாந்தில் ஜாஸ் பட்லர் (59), மொயின் அலி (36), லிவிங்ஸ்டன் (38) ஆகியோர் பின்னி எடுத்தனர்.

  ஆட்டத்தை தீர்மானித்த அந்த 5 ஒவர்கள்:

  இங்கிலாந்து முதலில் பேட் செய்த போது ஜேசன் ராய் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 10 ரன்களிலும் டேவிட் மலான் 1 ரன்னிலும் வெளியேற இங்கிலாந்து 3வது ஓவரில் 18/2 என்று இருந்தது, ஆனால் அதன் பிறகு இணைந்த மொயின் அலி, பட்லர் ஜோடி பிரித்து மேய்ந்தது, இதில் மொயின் அலி ரொம்ப உக்ரமாக இருந்தார், அடுத்த 5 ஓவர்களில் 67 ரன்களை இருவரும் விளாச ஸ்கோர் 8வது ஓவ்ரில் 85 ரன்களாக எகிறியது. 16 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் மொயின் அலி 36 ரன் எடுத்து தன் பணியைச் செவ்வனே செய்து ஆட்டமிழந்தார்.

  Also Read: India vs Sri Lanka| தவானின் இளம்படை அட்டகாசம்: இலங்கைப் பந்து வீச்சு துவம்சம்- இந்தியா அபார வெற்றி

  இந்த 5 ஒவர்கள்தான் போட்டியின் திருப்பு முனை, இங்கிலாந்தின் வெற்றிப்பாதைக்கு வழிவகுத்த 5 ஓவர்கள்.  மோர்கன் ரெஸ்ட் எடுத்ததால் பட்லர் கேட்பன் இவர் 39 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். இது இவரது 14வது டி20 அரைசதமாகும். லியாம் லிவிங்ஸ்டனுடன் இணைந்து சடுதியில் 52 ரன் கூட்டணி அமைத்தார், லிவிங்ஸ்டன் 23 பந்துகளில் 38 ரன் விளாசினார். பட்லர் ஹஸ்னைன் என்பவரை ஒரு சிக்ஸ் விளாச, ஹாரிஸ் ராவுஃப் பந்து வீச்சை மொயின் அலி கவனிக்க பவர் ப்ளேயின் கடைசி 2 ஒவர்களில் 38 ரன்களை இருவரும் விளாசித்தள்ளினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 50 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டன் இறங்கினார் ராவுஃபை நேராக சிக்ஸ் அடித்தார். பிறகு இமாத் வாசிமை லாங் ஆஃபில் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். பட்லர் 14வது ஓவரில் வெளியேறினார். ஜானி பேர்ஸ்டோ 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். லிவிங்ஸ்டன் ராவுஃபை அடித்த சிக்ஸ் ஒன்று இறங்குமா என்ற சந்தேகம் எழுந்தது, காட்டடி அது, பந்து ஸ்டேடியத்தைத் தாண்டி பின்னால் உள்ள ரக்பி மைதானத்தில் போய் விழுந்தது. ஆனால் டாம் கரன் தவறினால் லிவிங்ஸ்டன் ரன் அவுட் ஆனார். பாகிஸ்தான் பிழைத்தது. இதனால் இங்கிலாந்து 200 ரன்களில் முடிந்தது.

  ஸ்பின்னர்கள் ராஜ்ஜியம்:

  பாகிஸ்தான் அருமையாகத் தொடங்கியது பாபர் அசாம், ரிஸ்வான் 6வது ஓவரில் 50 ரன்களைக் கொண்டு வந்தனர். பாபர் அசாம் 22 ரன்களில் கவரில் கேட்ச் ஆனார்.

  பிறகு ஆதில் ரஷீத் வந்தார் ஷோயப் மக்சூத் (15) ஸ்டம்ப்டு ஆக பிறகு ரிஸ்வான் 37 ரன்களில் ரஷீத் பந்தில் அவரே ஒரு கையில் அருமையாகப் பிடித்த கேட்சில் வெளியேறினார். பேட்டிங்கில் அசத்திய மொயின் அலி பவுலிங்கில் மிக முக்கிய விக்கெட்டுகளான ஹபீஸ் (10), பகர் ஜமான் (8) ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார்.

  இங்கி. ஸ்பின்னர்கள் பார்கின்சன், மொயின் அலி.


  இன்னொரு முனையில் பார்கின்சன் அசத்தினார், கடைசியில் அசம் கான் விக்கெட்டை வீழ்த்தி அருமையான ஸ்பெல்லை முடித்தார். ஷதாப் கான் 22 பந்துகளில் 36 ரன்களையும் இமாத் வாசிம் 13 பந்துகளி 20 ரன்கள் எடுத்ததும் இடைவெளியை குறைக்க உதவியதே தவிர வெற்றிக்கான முன்னெடுப்பை நிகழ்த்த முடியவில்லை.

  வேகப்பந்து வீச்சாளர் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் ரஷீத், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டாம் கரன் 4 ஓவர் 22 ரன் ஒரு விக்கெட் என்று சிக்கனம் காட்டினார். வரும் செவ்வாயன்று இரு அணிகளும் வாழ்வா சாவா கடைசி 3வது டி20 போட்டியில் மோதுகின்றன. ஆட்டநாயகனாக மொயின் அலி தேர்வு செய்யப்பட்டார்.
  Published by:Muthukumar
  First published: