பார்படாஸில் நடைபெறும் 2வது இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் தன் 25வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். ஆனால் அவர் 23 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது அவுட் ஆனார், ஆனால் களநடுவர் அவுட் கொடுக்கவில்லை, வெஸ்ட் இண்டீஸ் ரிவியூ கேட்கவில்லை. அதே போல் ஜோ ரூட் 34 ரன்களில் இருந்த போது கேட்ச் ஒன்று நழுவ விடப்பட்டது, இதனையடுத்து இங்கிலாந்தை 244/3 என்று பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிராவ்லி ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினார். சற்று தாக்குபிடித்த அலேக்ஸ் லீஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட்- லாரென்ஸ் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தது. சிறப்பாக விளையாடிய லாரென்ஸ் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் தனது 25-வது சதத்தை பதிவு செய்தார்.
முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. 119 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஜோ ரூட் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். டேன் லாரன்ஸ் நேற்று கடைசி பந்தில் அவுட் ஆனதால் புதிய பேட்ஸ்மென் இன்று 2ம் நாள் ஆட்டத்தில்தான் களமிறங்குவார்.
23 ரன்களில் இருந்த போது ஜேசன் ஹோல்டர் பந்து ஒன்று ஜோ ரூட் மட்டையின் உள்விளிம்பில் பட்டுக் கேட்ச் ஆனது, களநடுவர் இல்லை என்றார், வெஸ்ட் இண்டீஸ் ரிவியூ செய்ய மறுத்தது, ஆனால் அது அவுட், ரூட் தப்பினார், அதே வேளையில் விக்கெட் கீப்பர் ஜொஷுவா டா சில்வா லெக் சைடில் ஒரு கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். இந்த முறை பரிதாப பவுலர் கிமார் ரோச்.
ஆனால் அதன்பிறகு ரூட் சிறப்பாக விளையாடினார், குறிப்பாக ஸ்பின்னர் வீராசாமி பெர்மாலை ஸ்வீப் செய்து வேகப்பந்து வீச்சாளர்களை ட்ரைவ்களை ஆடினார். 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 19 டெஸ்டில் தனது எட்டாவது சதத்தை வென்றார்.199 பந்துகளில் இந்த 25வது டெஸ்ட் சதத்தை எடுத்தார் ரூட்.
முதல் நாள் ஹைலைட்ஸ்:
ஜோ ரூட் 25-வது டெஸ்ட் சதத்தை அடித்தார், இங்கிலாந்து 244-3
மூன்றாவது விக்கெட்டுக்கு டான் லாரன்ஸுடன் ரூட் 164 ரன்கள் சேர்த்தார்
ரூட் அலெக்ஸ் லீஸுடன் (130 பந்தில் 38) 251 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார்.
சாகிப் மஹ்மூத், மாட் ஃபிஷர் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமானார்கள்
பார்படாஸில் கேப்டன் ஜோ ரூட் 246 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்தார்
கடைசி ஓவரில் டேன் லாரன்ஸ் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கிய போது ஜாக் க்ராலி டக் அவுட்
மார்க் உட், கிரெய்க் ஓவர்டன் அணியிலிருந்து நீக்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, Joe Root, Test cricket, West indies