புதிய இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று லீட்ஸ் டெஸ்ட் போட்டியை வென்று நியூசிலாந்து அணிக்கு 3-0 ஒயிட் வாஷ் கொடுத்தது பற்றி கோச் பிரெண்டன் மெக்கல்லம்தான் காரணம் எனும் ரீதியில் பெருமிதமகாப் பேசியுள்ளார். இதோடு இந்திய அணிக்கு எதிராகவும் இதே ஆக்ரோஷ மனநிலையில்தான் ஆடுவோம் என்கிறார் பென் ஸ்டோக்ஸ்.
296 ரன்கள் வெற்றி இலக்கை 54.2 ஓவர்களில் எடுத்தது இங்கிலாந்து, ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்தின் அதிவேக அரைசத சாதனையாக 30 பந்துகளில் 50 எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியதோடு 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 71 ரன்களை 44 பந்துகளில் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ஜோ ரூட் 125 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். முன்னதாக ஆலி போப் 82 பந்துகளில் சவுதீயிடம் அவுட் ஆனார்.
ஆலி போப் அவுட் ஆகும் போது 39.5 ஓவர்களில் 185/3, 296 ரன்கள் வெற்றி இலக்கை எட்டும்போது ஓவர் 54.2. மொத்த ரன் ரேட் 5.44. கடைசி 111 ரன்கள் 14 ஓவர்களில் விளாசப்பட்டது.
இந்தத் தொடரில் லார்ட்ஸ் 277, நாட்டிங்காமில் 299 ரன்கள், லீட்ஸில் 296 ரன்கள் என்று இங்கிலாந்து தன் டாப் 12 சேசிங்கில் இத்துடன் சிறந்த சேசிங் டீமாக உள்ளது. ஜானி பேர்ஸ்டோ இந்தத் தொடரில் 394 ரன்களை சராசரி 78.8, ஸ்ட்ரைக் ரேட் 120.
3-0 கிளீன் ஸ்வீப் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
எல்லாம் நன்றாகப் போனது, உலகின் தலைசிறந்த அணியை 3-0 என்று வென்றது உண்மையில் பெரிய விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் குறித்த வீரர்களின் மனநிலை மாற்றமே காரணம். மிக விரைவாக அடித்தோம், இதை நம்ப முடியவில்லை. இதற்கான பெரும்பெருமை கோச் பிரெண்டம் மெக்கல்லமையே சாரும்.
ட்ரெண்ட் பிரிட்ஜ் வெற்றி பெரிய விஷயம், இப்போது 55/6-லிருந்து ஆடியவிதம் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்குள் வந்து இத்தகைய ஒரு ஆட்டத்தை ஆட வீரர்கள் உண்மையில் விரும்பியுள்ளனர், அந்தச் சூழல் அமையும் போது அனைத்தும் சரியான இடத்தில் வந்து நிற்கிறது.
பிராட் 36 வயதிலும் இத்தகைய ஓவர்களை வீசுகிறார். ஜாக் லீச் மிகவும் அருமை. இந்தியா ஒரு வேறுமாதிரியான எதிரணி ஆனால் இதே ஆக்ரோஷ மனநிலையில்தான் ஆடுவோம்.
இவ்வாறு கூறினார் பென் ஸ்டோக்ஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England test, India Vs England, Joe Root, New Zealand