Home /News /sports /

498 ரன்கள்... ஒரு நாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து

498 ரன்கள்... ஒரு நாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து

NED vs ENG

NED vs ENG

NED vs ENG | நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 498 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

    நெதர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இது தான் நெகர்லாந்து எடுத்த மிகப் பெரிய தவறாக அமைந்து.

    இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோசன் ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த டேவிட் மலன், பிலிப் சால்ட் உடன் இணைந்து நெதர்லாந்து பந்துவீச்சை பறக்கவிட்டனர். பிலிப் சால்ட் 122 ரன்களும் டேவிட் மலன் 125 ரன்களும் குவித்தனர்.

    தூங்காதே தம்பி தூங்காதே.. இடம் போய்விடும்: ரிஷப் பண்ட்டிற்கு முன்னாள் இந்திய வீரர் குட்டு

    ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய ஜோஸ் பட்லர் 2 மடங்கு அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் சதம் விளாசிய பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லிவிங்ஸ்டன் இறுதியில் அதிரடி காட்டி 22 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

    இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த தனது சாதனையை இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 481 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது இங்கிலாந்து 498 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: England

    அடுத்த செய்தி