இந்திய அணிக்குச் சாதகமாகச் செயல்படும் நடுவர்கள்: வெறுப்படைந்த ஜாக் கிராலி, ஜோ ரூட்

இந்திய அணிக்குச் சாதகமாகச் செயல்படும் நடுவர்கள்: வெறுப்படைந்த ஜாக் கிராலி, ஜோ ரூட்

வெறுப்படைந்த இங்கிலாந்து வீரர்கள்.

நாங்கள் பேட் செய்த போது ஜாக் லீச் பாவம் பந்தை ஆடினார் ஆனால் பந்து புஜாராவிடம் தரையில் பட்டு சென்றது, ஆனால் அந்த ரிவியூவை 5-6 கோணங்களில் பார்த்து ஏதோ துல்லியம் பெற்றது போல் அவுட் கொடுக்கின்றனர். ஆனால் நாங்கள் பீல்டிங் செய்யும் போடு இதே சூழ்நிலையில் ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்த்து நாட் அவுட் என்கின்றனர்.

  • Share this:
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் பிட்சையும் குண்டும் குழியுமாக, தூசியும் தும்பட்டையுமாகப் போட்டு விட்டு நடுவர்களும் பாரபட்சமாக தீர்ப்புகளை வழங்கும் இரட்டைத் தாக்குதலை நேற்று இங்கிலாந்து சந்தித்தது.

சிலபல நடுவர் தீர்ப்புகள் பட்டவர்த்தனமாக ஒருதலைபட்சமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி கடும் வெறுப்படைந்துள்ளதாக மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கான எல்.பி.தீர்ப்புகளில் எந்த ஒரு சந்தேகமும் இன்றி களநடுவர் கையை உயர்த்துகிறார், இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் 3வது நடுவரை அணுகினால் அது ‘அம்பயர்ஸ் கால்’ என்ற ஒரு மோசடி தீர்ப்பைப் பெற்று அவுட் என்றே வருகிறது. அதே இந்திய பேட்ஸ்மென்களுக்கு களநடுவர் நாட் அவுட் என்கிறார் இங்கிலாந்து ரிவியூ செய்தால் அம்பயர்ஸ் கால் ஆகிவிடுகிறது.

ஷுப்மன் கில் ஒருமுறை பிராட் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார். ஆனால் களநடுவர் நாட் அவுட் என்றார். ரூட் ரிவியூ செய்தார், ரீப்ளேயில் பந்து பேடைத் தாக்கிய திசை ஸ்டம்புக்கு நேராக இருந்தது, ஆனால் அம்பயர்ஸ் கால் நாட் அவுட் என்பதால் 3வது நடுவர் நாட் அவுட் என்றார். அசிங்கமாகத் தப்பினார் கில்.

இதற்கும் மாறாக களநடுவர் ஷுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்தும் 3வது நடுவர் தீர்ப்பை மாற்றி நாட் அவுட் என்றார். அதாவது இந்திய பேட்ஸ்மென் அவுட் என்றால் அது நாட் அவுட், இங்கிலாந்து பேட்ஸ்மெனுக்கு அவுட் என்றாலும் அவுட், நாட் அவுட் என்றாலும் அவுட். இதுதான் பார்முலா போலும். புஜாரா ஜாக் லீச்சுக்கு எடுத்த கேட்ச் சந்தேகமின்றி அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது ஆனால் அதே இங்கிலாந்து பிடித்த கேட்ச் சந்தேகமின்றி நாட் அவுட். இது எப்படி என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நேற்று ஆட்டம் முடியும் போது ரோஹித் சர்மா 53 ரன்கள் இருந்த போது ஜாக் லீச்சின் பந்து என்ன ஆனது என்று தெரியாமல் பீட்டன் ஆனார். விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் பைல்களை அகற்றினார். ரோஹித் பின் கால் கிரீசுக்குள் இல்லை, ஆன் த கிரீஸ் அவுட். ஆனால் நடுவர் ஷம்சுதீன் நாட் அவுட் என்றார். இதனையடுத்து ஜோ ரூட் நடுவர் மேனனுடன் வாக்குவாதம் புரிந்தார், ஆனால் கோலி போல் ஆதிக்கபாவம் அல்லாமல் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.

நடுவர் மேனன் பாவம் ‘இது என்னடா இது அவுட் கொடுத்தால் ‘அவர்’ வைவார். கொடுக்காவிட்டால் இவர் வைவார்’ என்ற மனநிலையில் நின்று கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் சுட்டிக் காட்டி இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி கூறும்போது, “மிகவும் வெறுப்பாக இருக்கிறது. நாங்கள் ஆட்டத்தில் பின்னடைவு நிலையில் உள்ளோம் எனவே 50-50 அவுட் வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தவே விரும்புகிறோம். நிச்சயம் நடுவர் தீர்ப்புகளினால் இது எங்கள் நாள் அல்ல, எங்கள் வழி ஆட்டம் செல்லவில்லை.

நாங்கள் பேட் செய்த போது ஜாக் லீச் பாவம் பந்தை ஆடினார் ஆனால் பந்து புஜாராவிடம் தரையில் பட்டு சென்றது, ஆனால் அந்த ரிவியூவை 5-6 கோணங்களில் பார்த்து ஏதோ துல்லியம் பெற்றது போல் அவுட் கொடுக்கின்றனர். ஆனால் நாங்கள் பீல்டிங் செய்யும் போடு இதே சூழ்நிலையில் ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்த்து நாட் அவுட் என்கின்றனர். இங்குதான் வெறுப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.

அவை அவுட்டா நாட் அவுட்டா என்று நான் அறுதியிடவில்லை, ஆனால் ஒரு புறம் முழுதும் பார்த்துக் கொடுக்கப்படுகிறது இன்னொரு புறம் சரியாகப் பார்ப்பதில்லை என்பதுதான்.

நடுவருடன் ஜோ ரூட் வாக்குவாதம் புரிந்தது பற்றி நான் எதுவும் மூக்கை நுழைக்க விரும்பவில்லை, அதை மூத்த வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ஒரேயொரு ஸ்பின்னர் ஏனெனில் எந்த பிட்சிலும் வேகப்பந்து நன்றாகவே வீசுவோம், அதுவும் இது பகலிரவு டெஸ்ட், பிங்க் நிறப்பந்து டெஸ்ட் என்பதால் வேகப்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்” என்றார் ஜாக் கிராலி.
Published by:Muthukumar
First published: