ENGvAFG | இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு!

ICC World Cup 2019 | England Vs Afghanistan | இங்கிலாந்து அணி விளையாடி உள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

Web Desk | news18
Updated: June 18, 2019, 9:53 PM IST
ENGvAFG | இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு!
ENGvAFG
Web Desk | news18
Updated: June 18, 2019, 9:53 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து  அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி இதுவரை 4 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் என 3 அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் குவித்தது.

பந்துவீச்சிலும் இங்கிலாந்து அணி வீரர்கள் அசத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் முதலிடத்திற்கு முன்னேறும்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை 4 லீக் ஆட்டங்களிலுமே அந்த அணி தோல்வியைத் தழுவி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கான் ஒரு நல்ல ஆல் ரவுண்டராக உருவாகி வருகிறார்.

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் இதுவரை ஒருமுறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஒரு போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...