Home /News /sports /

WTC Points table: தொடரை வென்றும் இங்கிலாந்துக்கு பயனில்லை- ஏன் தெரியுமா?

WTC Points table: தொடரை வென்றும் இங்கிலாந்துக்கு பயனில்லை- ஏன் தெரியுமா?

இங்கிலாந்து வென்று என்ன பயன்?

இங்கிலாந்து வென்று என்ன பயன்?

பென் ஸ்டோக்ஸ் தலைமை இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்று வெற்றி பெற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 8ம் இடத்தில் இருக்கிறது, மேலும் ஸ்லோ ஓவர் ரேட் தொடர்பாக 2 புள்ளிகளையும் இழந்துள்ளதோடு 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பென் ஸ்டோக்ஸ் தலைமை இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்று வெற்றி பெற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 8ம் இடத்தில் இருக்கிறது, மேலும் ஸ்லோ ஓவர் ரேட் தொடர்பாக 2 புள்ளிகளையும் இழந்துள்ளதோடு 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    2 ஓவர்கள் அவர்கள் குறைவாக வீசியதால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 2-ஐ இழந்தனர், இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணையில் 8ம் இடத்தில் உள்ளனர், இதனால் புள்ளிகள் சதவீதமும் 25% லிருந்து 23.80% ஆகக் குறைந்துள்ளது. உண்மையில் 42 புள்ளிகள் என்று இருக்க வேண்டியது ஸ்லோ ஓவர் ரேட்டினால் 40 புள்ளிகளாக உள்ளது.

    வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவுப் பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, இங்கிலாந்து வீரர்களுக்கு ஸ்லோ ஓவர் வீதத்திற்காக அவர்களது போட்டிக் கட்டணத்தில் 40% அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசத் தவறிய அணி வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கள நடுவர்கள் மைக்கேல் கோஃப் மற்றும் பால் ரீஃபெல், மூன்றாவது நடுவர் ராட் டக்கர் மற்றும் நான்காவது நடுவர் மார்ட்டின் சாகர்ஸ் ஆகியோரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார், இதனால் முறையான விசாரணை தேவைப்படவில்லை.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்:

    1. ஆஸ்திரேலியா 8 போட்டிகள் 5 வெற்றி 3 ட்ரா - 72 புள்ளிகள்- 75%

    2. தென் ஆப்பிரிக்கா 7 போட்டிகள் 5 வெற்றி, 2 தோல்வி, 60 புள்ளிகள் 71.43%

    3. இந்தியா 12 போட்டிகள் 6 வெற்றி, 3 தோல்வி, 2 ட்ரா, 77 புள்ளிகள், 58.33%

    4. இலங்கை 6 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி, 1 ட்ரா, 40 புள்ளிகள், 55.56%

    5. பாகிஸ்தான் 7 போட்டிகள், 3 வெற்றி 2 தோல்வி, 2 ட்ரா, 44 புள்ளிகள் 52.38%

    இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அடுத்ததுதான் 8ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: England, ICC World Test Championship

    அடுத்த செய்தி