Home /News /sports /

100% சம்பளத்தை இழந்த இங்கிலாந்து வீரர்கள்- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5 புள்ளிகளும் காலி

100% சம்பளத்தை இழந்த இங்கிலாந்து வீரர்கள்- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5 புள்ளிகளும் காலி

இங்கிலாந்துக்கு கடும் பின்னடைவு

இங்கிலாந்துக்கு கடும் பின்னடைவு

பிரிஸ்பனில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செம தோல்வி கண்ட இங்கிலாந்தின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக ஓவர்களை மெதுவாக வீசியதற்காக ஐசிசி அந்த அணிக்கு கடும் அபராதம் விதித்தது.

    பிரிஸ்பனில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செம தோல்வி கண்ட இங்கிலாந்தின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக ஓவர்களை மெதுவாக வீசியதற்காக ஐசிசி அந்த அணிக்கு கடும் அபராதம் விதித்தது.

    இங்கிலாந்து வீரர்கள் 100% ஆட்டத்தொகையை இழந்ததோடு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளிகள் 5-ஐ இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகளின்படி மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் அட்ஜஸ்ட் செய்யப்பட்ட ஓவர்களை குறித்த நேரத்தில் வீச வேண்டும் அப்படி வீசவில்லை எனில் தாமதமாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் 20% சம்பளத்தை இழக்க நேரிடும். பிரிஸ்பன் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 ஓவர்களை தாமதமாக வீசியது இதனால் 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக ஆடியபோது குறித்த நேரத்தில் வீச வேண்டிய ஓவர்களை வீசாததால் இறுதிப் போட்டி வாய்ப்பையே இழந்தனர்.

    முதல் டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பனில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்தது. பிரிஸ்பன் டெஸ்ட்டில், “ஆஸ்திரேலிய கேப்ட்ன பேட் கம்மின்ஸின் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தனர். வார்னர் (94)மார்னஸ் லாபஸ்சேங் (74), டிராவிஸ் ஹேட் (152) ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 10 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து 277 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோரி பர்னஸ் 13 ரன்னிலும், ஹசீப் அஹமது 27 ரன்னிலும் அவுட்டாகினர். இவர்களுக்கு அடுத்து வந்த டேவிட் மலான் மற்றும் கேப்டன் ஜோ ரூட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்னர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இங்கிலாந்து 220 ரன்கள் எடுத்து இருந்தது.

    இதனால் இங்கிலாந்து பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-ம் நாள் தொடங்கிய உடனே போட்டி ஆஸ்திரேலியா கைக்கு மாறியது. இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இங்கிலாந்து இழந்தது.

    இதனால் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி இலக்காக 20 ரன்கள் மட்டுமே நிர்ணயக்கப்பட்டது. ஒரு விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    Also Read: Year Ender 2021: 2021-ல் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி

    டிசம்பர் 16ம் தேதி அடிலெய்டில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி