பயிற்சியை தொடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்...! இந்திய அணியின் முடிவு என்ன?

60 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டூவர் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

பயிற்சியை தொடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்...! இந்திய அணியின் முடிவு என்ன?
கோப்புப் படம்
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் விளையாட்டு உலகமே கடந்த இரண்டு மாதங்களாக முடங்கிக்கிடக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி மறுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில விழிப்புணர்வு வழிமுறைகளுடன் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கியிருந்தது. தனிநபர் பயிற்சி, 3 பேர் கொண்ட பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் கிருமி நாசினி தெளிப்பது என சில தடுப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதன் படி இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டூவர் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மைதானத்தில் தனியாக பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து கூறிய பிராட் நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சி மேற்கொண்டது சிறப்பானதாக அமைந்தது.

பயிற்சி மேற்கொண்டதை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் நிறைய அழைப்புகள் வந்தது. இதை வைத்து பார்க்கும் போது அனைவரும் இதற்குத்தான் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது என கூறினார்.

இங்கிலாந்து வீரர்களை தொடர்ந்து ஜூன் மாதம் தொடக்கத்திலிருந்து இலங்கை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்திய வீரர்களை பொருத்த வரை பிசிசிஐ அனுமதி வழங்காததால் இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை. மீறி பயிற்சியை தொடங்கிய ஷர்துல் தாக்கூர், மந்தனா ஆகியோர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading