பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 9ஆம் தேதி மூல்தான் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் அறிமுக பந்து வீச்சாளர் அப்ரார் அஹமது 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்களை எடுத்தது. இதையடுத்து 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற, சற்று சவாலான இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.
ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது ஜாஸ் பட்லருக்கு அறிவிப்பு…
தொடக்க வீரர்களான அப்துல்லா சபிக் 45 ரன்களும், விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வான் 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பாபர் ஆசம் ஒரே ரன்னுடன் வெளியேறினார்.
அடுத்துவந்த சவுத் ஷகீல் 94 ரன்களும், இமாம்-உல்-ஹக் 60 ரன்களும் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். இதன் பின்னர் களத்துக்கு வந்த முகமது நவாஸ் 45 ரன்களை எடுத்தார். அதன் பின்னர் விளையாடிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 102.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓலி ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்… நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் சேர்ப்பு…
வெற்றி இலக்கை மிகவும் நெருங்கி வந்த நிலையில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருப்பது வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தோல்வியின் மூலமாக பாகிஸ்தான் தொடரையும் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் பங்கேற்கும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 17ஆம் தேதி கராச்சி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் ஆறுதல் வெற்றியை பாகிஸ்தான் பெறுமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, Pakistan cricket