Home /News /sports /

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்.பயணம்; இங்கிலாந்து வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்.பயணம்; இங்கிலாந்து வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு

பாகிஸ்தான் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

பாகிஸ்தான் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு பாதுகாப்பான இடமே என்று உறுதி செய்ததையடுத்து இப்போது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது. ===

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி20 உலகக்கோப்பை வேறு உள்ளதால் பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டிகள் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான ஏழு 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலாவது ஆட்டம் வருகிற 20-ந்தேதி கராச்சியில் நடக்கிறது. போட்டி நடக்கும் நாட்களில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து ஸ்டேடியம் வரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அந்த பகுதி ஆயுதப்படை போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

முகமது ஷமி, உம்ரான் மாலிக் இந்திய அணியில் ஏன் இல்லை? ரசிகர்கள் கடும் விவாதம்

வீரர்களின் பயணத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு செல்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

கடைசியாக 2005-ம் ஆண்டில் அங்கு ஆடிய இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்து படுதோல்விகண்டது. அதன் பிறகு பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு அச்சம் காரணமாக பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வந்தது.

53 பந்துகளில் 79 விளாசிய ஸ்மிருதி மந்தனா-இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

கடந்த ஆண்டு கூட பாதுகாப்பு பிரச்சினை எதிரொலியாக கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணி பயணத்தை ரத்து செய்தது. இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. ஆனால் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு பாதுகாப்பான இடமே என்று உறுதி செய்ததையடுத்து இப்போது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Cricket, England, Pakistan cricket

அடுத்த செய்தி