ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்… வெற்றியை நெருங்கிய இங்கிலாந்து அணி…

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்… வெற்றியை நெருங்கிய இங்கிலாந்து அணி…

இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவை.

இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவை.

167 ரன்கள் எடுத்தால் 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 7 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இதன்பின்னர் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

IPL Auction : ‘மும்பை அணிக்கு ஆடம் ஸாம்பா அல்லது அடில் ரஷீத் அவசியம் தேவை’ – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்களையும், இங்கிலாந்து அணி 354 ரன்களையும் எடுத்திருந்தது. இதையடுத்து நடந்த இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் இளம் பந்து வீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது. இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லே 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிசிசிஐ உயர்மட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது… இந்திய அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை…

மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கட் 50 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது களத்தில் இறங்கிய ரெஹான் அகமது 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நாளை 4ஆம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.

வெற்றி பெறுவதற்கு இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், இந்த போட்டியில் மிக எளிதாக இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket, England