Home /News /sports /

டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு: அதிரடி வீரர் நீக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு: அதிரடி வீரர் நீக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடர் நடைபெறுகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அதிரடி வீரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடர் நடைபெறுகிறது.  டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட  இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக  விளையாடும். 4 அணிகள் தகுதிச் சுற்றிலிருந்து வரும்.

நாகின் டான்ஸ் ஆடி வங்கதேசத்தை கிண்டல் செய்த இலங்கை வீரர் கருணரத்னே!

இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ, நமீபியா ஆகிய 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த 8 அணிகளிலிருந்து  4 அணிகள் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலக கோப்பை ஆகும். இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சமீப காலமாக அதிரடி ஆடும் இளம் வீரர் பில் சால்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.



அதே போல் இன்னொரு அதிரடி மன்னன் பென் டக்கெட் என்பவரையும் இங்கிலாந்து தேர்வு செய்துள்ளது. டி-20 உலக கோப்பைக்கு தேர்வு செய்துள்ள அணி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 டி-20 போட்டிகளில் ஆடும் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் டி-20 உலக கோப்பைக்கான அணி விவரம்:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து டி-20 அணி விவரம்:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், பென் டக்கெட், லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வுட், மார்க் வுட்.
Published by:Musthak
First published:

Tags: Cricket, England, T20 World Cup

அடுத்த செய்தி