55 ஆண்டுகளுக்குப்பின் சாதித்த இங்கிலாந்து அணி!

England Complete Whitewash in Sri Lanka | 1963-ம் ஆண்டுக்குப்பின் வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. #ENGvSL

Web Desk | news18
Updated: November 27, 2018, 11:55 AM IST
55 ஆண்டுகளுக்குப்பின் சாதித்த இங்கிலாந்து அணி!
வெற்றியைக் கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள் (Twitter/England Cricket)
Web Desk | news18
Updated: November 27, 2018, 11:55 AM IST
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான தொடர்களையும் வென்று இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 5 ஒருநாள், ஒரு டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒரேயொரு டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பின்னர், நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலை வகித்தது. இதனை அடுத்து, கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி கொழும்புவில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 336 ரன்களும், இலங்கை அணி 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறியது.

நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களின் அபாரமான சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. இங்கிலாந்து அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதையும், பென் ஃபோக்ஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

England Spinner Jack Leach
விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள் (ICC)


இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போடிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கையை வாஷ் அவுட் செய்தது. 1963-ம் ஆண்டுக்குப்பின் வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Also See...

First published: November 27, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...