புதிய வரலாற்று சாதனைப் படைத்த இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன்!

ICC World Cup 2019 | England vs Afghanistan | Eoin Morgan | மார்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சர்கள் விளாசி 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Vijay R | news18
Updated: June 18, 2019, 7:34 PM IST
புதிய வரலாற்று சாதனைப் படைத்த இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன்!
இயான் மார்கன்
Vijay R | news18
Updated: June 18, 2019, 7:34 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக வின்ஸ், பேர்ஸ்டோவ் களமிறங்கினர். வின்ஸ் 26 ரன்களிலும், பேரிஸ்டோவ் 90 ரன்களிலும் அவுட்டாகினர். இங்கிலாந்து அணியின் 4-வது வீரராக களமிறங்கிய மார்கன் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார்.மார்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சர்கள் விளாசி 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள்(17) அடித்த வீரர் என்ற சாதனையை மார்கன் படைத்துள்ளார். இதற்கு முன் 16 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள்
இயான் மோர்கன் - 17, 2019
ரோஹித் சர்மா -16, 2013
டி வில்லியர்ஸ் - 16, 2015
கெய்ல் - 16, 2015
வாட்சன் - 15, 2011

Also Read :அடுத்தப் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இவர் தான்?

Also Read :காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

Also Watch
First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...