உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் விளையாட தடை! ஐசிசி

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதாக கூறி ஐ.சி.சி அவருக்கு தடைவிதித்துள்ளது.

Vijay R | news18
Updated: May 16, 2019, 11:31 AM IST
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் விளையாட தடை! ஐசிசி
இயான் மோர்கன்
Vijay R | news18
Updated: May 16, 2019, 11:31 AM IST
இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு தடை விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியசாத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் அதிகபட்சமாக 151 ரன்கள் எடுத்தார்.

இமாலாய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி 44.5 ஓவர்களிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தனர். இங்கிலாந்து அணியின் பேரிஸ்டோவ் அதிரடியாக ஆடி 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதாக கூறி ஐ.சி.சி ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 2வது முறையாக தாமதமாக பந்துவீசியதால் அடுத்த ஒரு நாள் போட்டியில் விளையாட தடைவிதித்தும் ஊதியத்திலிருந்து 40 சதவீதம் அபராதமும் விதித்துள்ளது. அணியின் இதர வீரர்களுக்கு 20 சதவீத அபாரதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

எனவே நாட்டிங்காமில் நாளை நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

Also Read:பவுலிங்கை கலாய்த்த ஐசிசி... பதிலடி கொடுத்த சச்சின்

Also Watch
First published: May 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...