முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சி.எஸ்.கே. வீரர்… மெக்கல்லம் ரிக்கார்ட் முறியடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சி.எஸ்.கே. வீரர்… மெக்கல்லம் ரிக்கார்ட் முறியடிப்பு

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்து 63 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறி வருவதால் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளார். உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பென் ஸ்டோக்ஸ் இருந்து வருகிறார். நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இதில் 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 49 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை, ஸ்டோக்ஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் மிக அதிகமான சிக்சர்கள் அடித்தவர் என்ற நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கல்லம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்தார். இந்த இன்னிங்ஸில் 2 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார் பென் ஸ்டோக்ஸ். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 109 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்டில் 12 சதங்களுடன் 5,652 ரன்களை இவர் குவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 107 சிக்சர்களை அடித்துள்ளார். டெஸ்ட்டில் தொடக்க வீரராக களம் இறங்கும் இவர் டெஸ்டில் 6,453 ரன்களை குவித்துள்ளார். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந் அணி 325 ரன்களும், நியூசிலாந்து 306 ரன்களும் எடுத்துள்ளது. 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 374 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற நிலையில், 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்நது அணி விளையாடி வருகீறது. இன்றைய 3ஆம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறி வருவதால் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

First published:

Tags: Cricket