2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி..

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி..
2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அபார வெற்றி
  • Share this:
இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 469 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. அதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 287 ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 129 ரன்களை சேர்த்து டிக்ளர் செய்திருந்தது.

இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் படிக்க...

மனைவி கள்ளத்தொடர்பு: 2 மகன்களை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை முயற்சி

மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading