ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சில்லுசில்லாய் உடைந்த நியூசிலாந்தின் அரையிறுதி கனவு.!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சில்லுசில்லாய் உடைந்த நியூசிலாந்தின் அரையிறுதி கனவு.!

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து -நியூசிலாந்து உள்ளிட்ட மூன்று அணிகள் போட்டியில் உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaBisbaneBisbaneBisbaneBisbane

  நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு இங்கிலாந்து அணி முட்டுக்கட்டை போட்டுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

  தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அரை சதம் அடித்த அலெக்ஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது.

  Also Read: ''இந்தியாவை வெற்றி பெற்றால் வருத்தப்படுவோம்'' - சென்டிமென்டாக பேசிய வங்கதேச அணி கேப்டன்!

  180 ரன்கள் இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் பின் ஆலன் 16 ரன்னும், கான்வே 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லிம்சன் 40 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் ஆட்ட்மிழந்தால் ஆட்டம் இங்கிலாந்து அணி பக்கம் திரும்பியது.

  பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள்அடித்தது. இதையடுத்த 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

  இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி சென்று விடலாம் என இருந்த நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.மேலும் இந்த வெற்றியின் மூலம் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து -நியூசிலாந்து உள்ளிட்ட மூன்று அணிகள் போட்டியில் உள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: England, New Zealand, T20 World Cup