ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

T20 World Cup | டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அடிலெய்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

  இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.

  அடிலெய்ட்டில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பிடித்துள்ளனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து கேப்டன் ரோகித் ஷர்மாவும் 28 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் மறுபடியும் ஏமாற்றம் அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

  பொறுப்பாக விளையாடிய விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார்.39 பந்துகளில் அரைசதம் அடித்ததார். ஆனால் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

  இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இந்தி அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. இந்திய அணி ஒரு விக்கடெ் கூட எடுக்க முடியாமல் திணறியது.

  ஜோஸ் பட்லார் மற்றும் அலக்ஸ் அரைசதம் கடந்தும் அதிரடியை கைவிடவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர். இதையடுத்து வரும் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India Vs England, T20 World Cup