Home /News /sports /

ICC world cup ENGvsIND: இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ICC world cup ENGvsIND: இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

INDvENG

INDvENG

ICC World Cup 2019 | India vs England | 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 31  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு இங்கிலாந்திற்கு முக்கியமான போட்டி என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுப்பட்டனர்.

இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். இங்கிலாந்து 160 ரன்கள் எடுத்திருந்த போது ஜோசன் ராய் 66 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் 111 ரன்கள் விளாசினார். இறுதி ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த வந்த விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுத்த இவர்கள் 100 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலி 66 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 102 ரன்களில் ரோஹித் சர்மா அவுட்டானார். ரிஷ்ப் பண்ட் 32 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தோனி 31 பந்துகளில் 42 ரன்களும், கேதர் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி