Home /News /sports /

ஜேசன் ராய் விளையாடத் தடை - இங்கிலாந்து வாரியம் அதிரடி

ஜேசன் ராய் விளையாடத் தடை - இங்கிலாந்து வாரியம் அதிரடி

ஜேசன் ராய்க்குத் தடை

ஜேசன் ராய்க்குத் தடை

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. மேலும், ஜேசன் ராய்க்கு 2,500 பவுண்டு அபராதமும்விதிக்கப்படுள்ளது. ஆனால் அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்கவும் ...

    ஜேசன் ராய் கிரிக்கெட்டின் நலன்களுக்கு பாதகமான அல்லது கிரிக்கெட் விளையாட்டுக்கும், ECBக்கும், தனக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, கிரிக்கெட் ஒழுங்கு ஆணையத்தின் ஒழுங்குமுறைக் குழு, ஜேசன் ராய் மீது தனது தடையை அறிவித்தது.

    ராயின் அடுத்த இரண்டு இங்கிலாந்து போட்டிகளுக்கு தேர்வு செய்ய தகுதியுடையவராக இருந்த போதிலும் தடை செய்யப்பட்டுள்ளார். , ஆனால் "நல்ல நடத்தை சார்ந்து 12 மாதங்களுக்கு இந்த தடை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31க்குள் அவர் £2,500 அபராதம் செலுத்த வேண்டும். அதாவது ஒழுங்கினத் தவறை அவர் 12 மாதங்களுக்குள் மீண்டும் செய்தால் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். அதனால் அவர் அடுத்த போட்டிகளில் கூட ஆட முடியும்.

    ராய்க்கு எதிராக தடை வழங்கப்படுவதற்கு காரணமான நடவடிக்கை பற்றி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை, வழக்கமான நெறிமுறையிலிருந்து விலகி, எழுத்துப்பூர்வ காரணங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

    ராய் தனது ரூ. 2 கோடி (சுமார் £200,000) குஜராத் டைட்டன்ஸ் உடனான ஐபிஎல் ஒப்பந்தத்தை விடுத்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். பிஎஸ்எல்லில் குவெட்டா கிளாடியேட்டர்ஸுடன் தனது பங்களிப்பைத் தொடர்ந்து "எனது குடும்பத்துடன் சில தரமான நேரத்தை செலவிட வேண்டும்" என்ற அவரது விருப்பத்தை மேற்கோள் காட்டி ஐபிஎல் 2022-லிருந்து விலகினார்.

    அவரது கவுண்டி, சர்ரே, அவர் சாம்பியன்ஷிப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களைத் தவறவிடுவதாகவும், அதற்குப் பதிலாக "விளையாட்டிலிருந்து ஒரு குறுகிய, காலவரையற்ற இடைவெளியை" எடுப்பதாகவும் அறிவித்தது. ராய் தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறையில் இருக்கிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, England, IPL 2022

    அடுத்த செய்தி