இந்த முறையாவது கோப்பை வெல்லுமா இங்கிலாந்து? உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பு!

#England announce 15-man squad for #WorldCup2019 ; #JofraArcher excluded | நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்த முறையாவது கோப்பை வெல்லுமா இங்கிலாந்து? உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பு!
உலக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி. (ICC)
  • News18
  • Last Updated: April 18, 2019, 3:52 PM IST
  • Share this:
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இயான் மோர்கன் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்காக, முதன் முதலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், இயான் மோர்கன் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷித், லியாம் ப்ளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்செர், கிறிஸ் ஜோர்டன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை.
கிரிக்கெட் விளையாட்டில் முன்னோடியாக இருக்கும் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து அணி, முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!

VIDEO | வைரலாகும் ஸிவா தோனியின் புதிய வீடியோ!

VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!

#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading