இந்திய அணியைக் குறைத்து மதிப்பிடுகிறாரா ஜோ ரூட்? - டாம் பெஸ், ஆண்டர்சன் இல்லை- இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்

இந்திய அணியைக் குறைத்து மதிப்பிடுகிறாரா ஜோ ரூட்? - டாம் பெஸ், ஆண்டர்சன் இல்லை- இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்

இங்கி. அணியில் 4 மாற்றங்கள்.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது இதற்காக இங்கிலாந்து தன் 12 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

  • Share this:
    சென்னை டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் 2வது டெஸ்ட் போட்டிக்கு 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை சேப்பாக்கத்தில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது இதற்காக இங்கிலாந்து தன் 12 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

    அபாரமாக வீசிய ஆஃப் ஸ்பின்னர் டாம் பெஸ் இல்லை ரிவர்ஸ் ஸ்விங்கில் கடந்த போட்டியில் ஷுப்மன் கில், ரஹானே, ரிஷப் பந்த்தை காலி செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லை. பட்லர் ஊருக்குச் சென்று விட்டார், ஆர்ச்சர் காயமடைந்து விலகினார்.

    இவர்களுக்குப் பதிலாக பிராட், மொயின் அலி, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், ஆலி ஸ்டோன் என்ற வீரரும் அணிக்குள் வந்துள்ளார்.

    3 டெஸ்ட் போட்டிகள் 3 வாரங்களில் நடக்கவிருப்பதால் அணியில் வீரர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்வதாக ஜோ ரூட் தெரிவித்தார், டாம் பெஸ் இரண்டாவது இன்னிங்சில் சரியாக வீசவில்லை, முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக வீசி கோலியைக் காலி செய்தார். ஆனால் 2வது இன்னிங்ஸில் திடீரென புல்டாஸாக வீசத் தொடங்கினார்.

    முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்த டாம் பெஸ் மொத்தம் 19 புல்டாஸ்களை வீசியதும் அவரது நீக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.

    எனவே ஜோ ரூட் கூறும்போது, “நாங்கள் தொடரை வெல்ல வேண்டுமென்றால் முழு அணியும் தயாராக இருக்க வேண்டும் எனவே ரொடேஷன் பாலிசி கடைப்பிடிக்கிறோம். பிரஷ் ஆக வந்து வீரர்கள் ஆட வேண்டும். அணியின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறேன். எனவே இவர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து வெற்றிபெறுவோம் என்ற தைரியத்தில் எடுக்கிறேன்” என்றார்.

    பென் ஸ்டோக்ஸ் லேசான காயமடைந்துள்ளாரே என்ற கேள்விக்கு ’அவர் விளையாடுவார்’ என்றார் ஜோ ரூட்.

    ஆனால் ஜாக் கிராலி பரிசீலிக்கப்படவில்லை. மொயின் அலி ஆகஸ்ட் 2019 முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை, ஆனால் இந்தியாவுக்கு நிச்சயம் இவர் ஆல்ரவுண்டராக அச்சுறுத்தலாக இருப்பார், இங்கிலாந்து பிட்சிலேயே இருமுறை இந்திய அணியை சுருட்டி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார் மொயின்.

    2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:

    டாம் சிப்லி, ரோரி பர்ன்ஸ், டேன் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ் (வி.கீ), மொயின் அலி, ஜாக் லீச், பிராட், வோக்ஸ், 12வது வீரர் ஆலி ஸ்டோன்.

    இதன் மூலம் கடைசி வரை பேட்டிங்கை வைத்துள்ளது இங்கிலாந்து, அஸ்வின், பும்ரா, குல்தீப்புக்குச் சவால் காத்திருக்கிறது.
    Published by:Muthukumar
    First published: