உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து!

Vijay R | news18
Updated: July 24, 2019, 6:27 PM IST
உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து!
ENGvIRE
Vijay R | news18
Updated: July 24, 2019, 6:27 PM IST
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது.

ஐசிசி-யின் புதிய விதிமுறையின் துணையோடு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகளும், பெருமைகளும் குவிந்து வருகின்றன.

வெற்றி களிப்பில் திளைத்திருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு அயர்லாந்து மிகப் பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், அயர்லாந்துடன் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிரது.


லண்டன் லார்டஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஜோசன் ராய் இருவரையும் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மர்தாஹ் அவுட்டாக்கினார். அடுத்த வந்த கேப்டன் ஜோ ரூட், ஜோ டென்லியை  மார்க் அடேர் வெளியேற்றினார்.



இங்கிலாந்து அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் அந்த அணிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜானி பேரிஸ்டோவ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் மூன்று பேரும் தொடர்ச்சியாக டக் அவுட்டாக்கி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தனர்.

இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்ததால் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றது. அதே மைதானத்தில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணி 85 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...