மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!

ICC World Cup 2019 | ENGvWI | இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: June 14, 2019, 3:14 PM IST
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!
ICC World Cup 2019 | ENGvWI | இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
Web Desk | news18
Updated: June 14, 2019, 3:14 PM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து  மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன.


ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் இரு அணிகளும் மோதவுள்ளன.

இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடரும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 மாற்றங்கள் உள்ளன.

ரஸ்ஸல் , எவின் லெவிஸ், மற்றும் சான்னன் கேப்ரியல் இடம் பெற்றுள்ளனர். சான்னன் கேப்ரியலுக்கு இது முதல் போட்டி என அந்த அணியின் கேப்டன் ஜஸன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
Loading...
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என இரு அணிகளும் முனைப்புடன் செயல்படும்.

Also watch: நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால்தான் உடனடி நடவடிக்கையா?- உயர்நீதிமன்றம் கேள்வி

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...