மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிகள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

Web Desk | news18
Updated: June 14, 2019, 9:51 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து அபார வெற்றி
Web Desk | news18
Updated: June 14, 2019, 9:51 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றது.  19-வது லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் இரு அணிகளும் மோதின.

இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 3 மாற்றங்கள் உள்ளன.

ரஸ்ஸல், எவின் லெவிஸ், மற்றும் சான்னன் கேப்ரியல் இடம் பெற்றுள்ளனர். சான்னன் கேப்ரியலுக்கு இது முதல் போட்டி என அந்த அணியின் கேப்டன் ஜஸன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிகள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

பின்பு, நிதானமாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, விக்கெட்டுகளை ஆங்காங்கே பறிகொடுத்தாலும் இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இலக்கை நோக்கி, களமிறங்கிய இங்கிலாந்து தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். இறுதியாக 2 விக்கெட் மட்டுமே பறிகொடுத்து, 33.1 ஓவர்களில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Loading...
Also watch: நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால்தான் உடனடி நடவடிக்கையா?- உயர்நீதிமன்றம் கேள்வி

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...