Home /News /sports /

இரண்டே நாளில் தென் ஆப்பிரிக்காவை ‘பேக்’ செய்து அனுப்பிய இங்கிலாந்து- வெற்றியை உறுதி செய்தது

இரண்டே நாளில் தென் ஆப்பிரிக்காவை ‘பேக்’ செய்து அனுப்பிய இங்கிலாந்து- வெற்றியை உறுதி செய்தது

இங்கிலாந்து - சவுத் ஆப்ரிக்கா

இங்கிலாந்து - சவுத் ஆப்ரிக்கா

OVAL TEST:எல்கர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகள் என்ற சாதனையைக் கடந்து அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiabritainbritain
    எப்போதும் இங்கிலாந்து அணிதான் எதிரணியை வம்புக்கு இழுத்து மூக்குடை படும், ஆனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னால் மெக்கல்லமின் ‘பாஸ்பால்’ எல்லாம் ஒன்றுமில்லை நாங்கள் பின்னி விடுவோம் என்றெல்லாம் பேசி விட்டு கடைசியில் ஓவல் டெஸ்ட் போட்டியில் இரண்டே நாளில் தோற்கும் நிலை எய்தி தொடரையும் 1-2 என்று இழக்கப்போகிறது தென் ஆப்பிரிக்கா.

    முதல் இன்னிங்சில் ஆலி ராபின்சன் (5/49), ஸ்டூவர்ட் பிராட் (4/41) ஆகியோரது துல்லியமான ஸ்விங் பவுலிங்கில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்களுக்குச் சுருண்டது,  தென் ஆப்ரிக்காவின்  ரபாடா (4/81), யான்சென் (5/35) என்று பிரமாதமாக வீச   இங்கிலாந்தும் 158 ரன்களுக்குச் சுருண்டது, ஆலி போப் மட்டுமே அதிகபட்சமாக 67 ரன்களை எடுத்தார். நேற்று மீண்டும் தன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 58/0 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்தின் ஸ்விங் பவுலிங்கிற்கு திணறி வரிசையாக விக்கெட்டுகளைக் கொடுத்து அடுத்த 111 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு மடிந்தது.

    இங்கிலாந்து வெற்றிக்குத் தேவை 130 ரன்கள் என்ற நிலையில் 97/0 என்று 17 ஓவர்களில் அதிரடியாக ஆடி வருகிறது இங்கிலாந்து அலெக்ஸ் லீஸ் 32 ரன்களுடனும் ஜாக் கிராலி 44 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் தேவை 33 ரன்களே. ப்ளே என்று சொல்வதற்குள் அடித்து முடித்து விடுவார்கள்.

    எல்கர் எல்.பி. அவுட் தீர்ப்பை ரிவியூ செய்யாமல் விட்ட பெருந்தவறு:
    தென் ஆப்பிரிக்கா தன் 2வது இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்து நோ-லாஸ் என்று எல்கரும், சரல் எர்வீயும் நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பிராட் பந்து ஒன்றை எல்கர் கால்காப்பில் வாங்க நடுவர் நிதின் மேனன் கையை உயர்த்தினார். எல்கர் ரிவியூ செய்யாமல் விட்டார், பந்து லெக் ஸ்டம்பை விட்டு சில அடி விலகிச் செல்வது ரீப்ளேயில் தெரிந்தது. இது மிகப்பெரிய தவறாக, தென் ஆப்பிரிக்கா அதன் பிறகு 111 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 169க்கு சுருண்டது.

    இதையும் படிங்க: Asia Cup: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை

    பிராட், ஆண்டர்சன் இவர்களுக்கு மேலாக முழங்கால் காயத்தையும் பொருட்படுத்தாமல் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆலி ராபின்சன் 2 விக்கெட்டுகலைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா சரிந்தது.   அதே போல் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து சேஸ் செய்யும் போது யான்சென், லீஸுக்கு ஒரு கேட்சை விட்டார், இதெல்லாம் முக்கியமான தருணங்கள்.

    எப்படி எல்கர் எல்.பி. தென் ஆப்பிரிக்காவை பேக் செய்ததோ, இந்த கேட்சைப் பிடித்திருந்தால் பிரஷரில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.  எல்கர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகள் என்ற சாதனையைக் கடந்து அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.  இன்று இங்கிலாந்து நிச்சயம் வெற்றி பெறும், தொடரை 2-1 என்று கைப்பற்றும் ஏனெனில் தேவை இன்னும் 33 ரன்களே.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cricket, England, South Africa

    அடுத்த செய்தி