Home /News /sports /

ENG vs SA 1st T20I: 20 சிக்ஸ், 20 ஓவர்களில் 234 விளாசி தென் ஆப்பிரிக்காவை நொறுக்கிய இங்கிலாந்து

ENG vs SA 1st T20I: 20 சிக்ஸ், 20 ஓவர்களில் 234 விளாசி தென் ஆப்பிரிக்காவை நொறுக்கிய இங்கிலாந்து

மொயீன் அலி ஆட்ட நாயகன். 16 பந்தில் அரைசத சாதனை

மொயீன் அலி ஆட்ட நாயகன். 16 பந்தில் அரைசத சாதனை

பிரிஸ்டலில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து தங்களது 2வது பெரிய டி20 போட்டி ஸ்கோரை எடுத்தது. 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் வரை வந்து போராடி தோல்வி கண்டது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும் ...

    இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 8 சிக்ஸ்களுடன் 90 ரன்கள். டேவிட் மலான் 23 பந்தில் 1 பௌவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாச மொயின் அலி 18 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 52 ரன்கள் பின்னி எடுக்க மொத்தம் 20 சிக்ஸ், 9 பவுண்டரிகள். அதாவது 156 ரன்கல் வெறும் பவுண்டரிகளிலேயே விளாசி 234 ரன்கள் என்ற தன் 2வது பெரிய டி20 ஸ்கோரை எட்டியது இங்கிலாந்து. மொயின் அலி 16 பந்துகளில் அரைசதம் விளாசி புதிய இங்கிலாந்து சாதனை படைத்தார்.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 7/2 என்று தடுமாறியது. ஆனால் ரீசா ஹென்றிக்ஸ் (57), கிளாசன் (20) கொஞ்சம் அணியை நிமிர்த்த, ஐபிஎல்-ல் நாம் பார்த்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாசித்தள்ளினார் ஆனாலும் கடைசி 2 ஓவர்களில் 50 ரன்கள் என்பது டூ மச் ஆகி தென் ஆப்பிரிக்கா 193/8 என்று முடிந்தது.

    இங்கிலாந்து தரப்பில் டாப்லி மீண்டும் அட்டகாசமாக வீசி 4 ஒவர் 29 ரன் 2 விக்கெட், ஜோர்டான் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர் வெறும் 30 ரன்கள் என்று கட்டுப்படுத்த கிளீசன் 4 ஓவர் 51 ரன்கள் என்று சாத்துமுறை வாங்கினாலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மொயின் அலி 2 ஓவர் 27 ரன் 1 விக்கெட், ஆதில் ரஷீத் 1 விக்கெட்.

    தென் ஆப்பிரிக்கா பவுலிங்கில் ஆச்சரியம் என்னவெனில் மகராஜ் 4 ஒவர் 31 ரன்கள், ரபாடா 4 ஒவர் 30 ரன்கள், லுங்கி இங்கிடி 4 ஓவர் 39 ரன்கள் 5 விக்கெட். ஆகவே 12 ஓவர்களில் இவர்கள் 100 ரன்களையே விட்டுக் கொடுத்தனர் 5 விக்கெட்டுகளும் பறிபோயுள்ளது, ஆனால் 8 ஓவர்களில் 134 ரன்கள் விளாசப்பட காரணம் பெலுக்வயோ 4 ஓவர்களில் 2 பவுண்டரி 7 சிக்சர்களை விட்டுக் கொடுத்து 63 ரன்களை வாரி வழங்கினார். தப்ரைஸ் ஷம்ஸி 3 ஓவர் 49 ரன்கள். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் 20 ரன்கள். ஆகவே இந்த 8 ஓவர்களில் தான் விளாசப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா பீல்டிங் படுமோசம் பேர்ஸ்டோவுக்கு மட்டும் 4 கேட்ச்களை விட்டனர். ஹென்ரிச் கிளாசன் 2 முறை, ரைலி ரூசோவ், ரீசா ஹென்றிக்ஸ் தலா ஒரு முறை பேர்ஸ்டோவுக்கு வாழ்வளித்தனர். ஆட்ட நாயகன் மொயின் அலி.

    இரு அணிகளும் 2வது ஒருநாள் போட்டியில் கார்டிஃபில் இன்று மோதுகின்றன. இந்திய நேரம் மாலை 6:30 மணிக்கு இந்த ஆட்டம். ஞாயிறன்று சவுத்தாம்ப்டனில் இந்திய நேரம் 2:30க்கு கடைசி டி20 போட்டி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: England, South Africa, T20

    அடுத்த செய்தி