ENG vs NZ: நியூசிலாந்துக்கு பின்னடைவு: கேன் வில்லியன்சனுக்குக் கொரோனா
ENG vs NZ: நியூசிலாந்துக்கு பின்னடைவு: கேன் வில்லியன்சனுக்குக் கொரோனா
கேன் வில்லியம்சனுக்குக் கொரோனா
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கோவிட் -19 தொற்று காரணமாக இன்று தொடங்கும் 2வது டெஸ்ட்டில் இல்லை. . சிறிய நோய்ட் அறிகுறிகள் ஏற்பட கேன் வில்லியம்சன் வியாழன் அன்று ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் (RAT) எடுத்தார் அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கோவிட் -19 தொற்று காரணமாக இன்று தொடங்கும் 2வது டெஸ்ட்டில் இல்லை. . சிறிய நோய் அறிகுறிகள் ஏற்பட கேன் வில்லியம்சன் வியாழன் அன்று ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் (RAT) எடுத்தார் அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
"இது போன்ற ஒரு முக்கியமான போட்டிக்கு முன்னதாக கேன் வில்லியம்சன் விலக நேரிட்டது உண்மையில் பாவம்தான். "இந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் அவருக்காக பரிதாபப்படுகிறோம், இதனால் அவர் எவ்வளவு ஏமாற்றமடைவார் என்பது தெரியும்." என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்.
வில்லியம்சன் இப்போது ஐந்து நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அவர் இல்லாத நிலையில் டாம் லேதம்அணியை வழிநடத்துவார். லீசெஸ்டர்ஷயர் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் , கேன் வில்லியம்சனுக்கு மாற்றாக அழைக்கப்பட்டுள்ளார் இவர் வெள்ளிக்கிழமை நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இணைவார்.
வில்லியம்சன் விலகல், ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் குதிகால் காயத்தைத் தொடர்ந்து தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டது ஆகியவற்றால் நியூசிலாந்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது.
2வது டெஸ்ட்டுக்கான நியூசிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், ஹமிஷ் ரூதர்ஃபோர்ட், ஹென்றி நிக்கோல்ஸ், கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, அஜாஸ் படேல், டிரென்ட் போல்ட், நீல் வாக்னர், கேம் பிளெட்சர், மாட் ஹென்றி, மைக்கேல் பிரேஸ்வெல்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.